| "இக்காலத்தில் ஆங்கில பாஷை கற்ற தமிழ் மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்க வேண்டுவது அவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றனவென்றும் பலதிறம்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ் கற்க வேண்டியதவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமுமற்ற கூற்றாம். இவ்விரண்டும் மிக்க ஆங்கிலேயர் இவ்விரண்டும் அற்றவர்களை எவ்வாறு மதிப்பரோ?" "ஆங்கிலம் முதலிய பிறபாஷைக்குரியராய் அப்பாஷைகள் வல்லுநரெல்லாம் தமிழ்மொழியின் மீதார்வமுடையவராய்த் தமிழைக் கற்றும் தமிழ் நூல்களைத் தங்கள் பாஷைகளில் மொழி பெயர்த்துங் கொள்ளுதலை உற்று நோக்கியதால் தமிழ்க் கல்வி அவசியமன்று என்பார்க்குப் புத்தி வரட்டும்."1 ஆங்கில ஆதிக்கத்தை அறிஞர் சாஸ்திரியார் வெறுத்தாரெனினும், ஆங்கிலத்தை ஒரு மொழியாகத் தமிழர் கற்கவேண்டுமென்பதனை வற்புறுத்த அவர் தவறவில்லை. அத்துடன், ஆங்கிலங் கற்ற தமிழர், அம்மொழியிலுள்ள அறிவு நூல்களைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தினையும் வெளியிட்டார். ஆம்; நாளடைவில் கல்லூரிகளில் தமிழே பயிற்சி மொழியாக வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே தமிழில் அறிவு நூற்கள் வெளிவர வேண்டும் என்றார். "ஆங்கிலரைப் போலத் தமிழ் மக்களும் நாகரிக நிலையில் உயர வேண்டின் ஆங்கிலங் கற்று அவர்களது சாஸ்திர ரகசியங்களை அறிந்து கொள்ளவேண்டும். அங்ஙனங் கற்றுக் கொண்டோரிற் சிலர் அவ்வரிய உண்மைகளைத் தம்முடைய தாய் மொழியாகிய தமிழ்மொழியில் வெளியிடுதற் குரிய ஆற்றலிராய்த் தம்மவர்க்குப் பயன்படாது வாணாள் வீணாள் கழிக்கின்றனர். இப்பொழுதான் சிலர் தமிழ் மொழியைக் கண்விழித்துப் பார்ப்பாராயினர். அநேகர் ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கப் புகுந்தனர். இவ்வாறு மொழி பெயர்ப்பு வகையால் ஆங்கிலக் கருத்துக்கள் தமிழின்கண் எவ்வளவு புகினும் நலமே."2 சாஸ்திரியார், வடமொழிப் புலமையுடைய வைதிகக் குடும்பத் திலே பிறந்தவர். அவருக்கும் வடமொழிப்புலமை உண்டு. அப்படி யிருந்தும், தமிழ்மொழியின் தனித்தன்மையை அழித்தொழித்து 1. 'தமிழ் மொழியின் வரலாறு'; பக்.139-140. 2. 'தமிழ் மொழியின் வரலாறு'; பக்.136-37. |