பக்கம் எண் :

குழந்தை மணம்11

Untitled Document
எல்லாவிதமான       போதனைகளும்   அனாவசியமானவை என்று
ஆக்கிவிடக் கூடியவை. நாளடைவில்    ஒருவரையொருவர் அறிந்து
கொண்டோம். ஆனால், கணவன் என்ற  அதிகாரத்தை நான் உடனே
மேற்கொண்டுவிட்டேன்.

4. கணவன் அதிகாரம்


     எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு
தம்படி   விலையில் (எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச்
சரியாக நினைவில்லை). சிறு    பிரசுரங்கள்     வெளியாகி வந்தன.
தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை         மணங்கள் முதலிய
விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கப் பட்டிருக்கும்.
அவை எனக்குக்    கிடைத்த போதெல்லாம்     ஒரு வரி விடாமல்
அவற்றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காதவற்றை  மறந்துவிடுவதும்,
பிடித்தமானவற்றை அனுபவத்தில்  நிறைவேற்றி வருவதும் என்னிடம்
இருந்த பழக்கமாகும். மனைவியிடம்          வாழ்நாள் முழுவதும்
விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது   ஒரு கணவனின் கடமை
என்று இப்பிரசுரங்களில்    கூறப்பட்டிருந்தது, என்     உள்ளத்தில்
நிரந்தரமாகப்     பதிந்து    நிலைத்து விட்டது.  அத்துடன், சத்திய
வேட்கையும் என்னுள்     இருந்ததால்  மனைவியிடம்  உண்மைக்கு
மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே இடமில்லை. மேலும்,அந்தச்
சிறு வயதில்     மனைவிக்குத் துரோகம்     செய்யச் சந்தர்ப்பமும்
கிடையாது.

     ஆனால், மனைவியிடம்    உண்மையோடு   நடந்து கொள்ள
வேண்டும் என்ற      பாடத்தினால்   எதிரிடையான ஒரு விளைவு
ஏற்பட்டது.   ‘ நான் என்   மனைவியிடம்   உண்மையோடு நடந்து
கொள்ளுவதென்றால், அவளும்    என்னிடம் உண்மையோடு நடந்து
கொள்ள வேண்டும்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த
எண்ணம் என்னைச்  சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது.
அவள்   உண்மையோடு    நடப்பவளாக இருக்கும்படி செய்வதற்கு,
அவளுடைய கடமையை   எளிதில்      என் உரிமையாக ஆக்கிக்
கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில்  நான் விழிப்புடன் இருந்து
வலியுறுத்துவது என்றும்        தீர்மானித்தேன். அவளுடைய பக்தி
விசுவாசத்தில் நான் சந்தேகம்  கொள்ளுவதற்குக் காரணமே இல்லை.
ஆனால், காரணங்களுக்காகச்    சந்தேகம்              காத்துக்
கொண்டிருப்பதில்லை. ஆகவே, அவள்        செய்வதையெல்லாம்
எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என்
அனுமதியின்றி அவள்  எங்குமே போகக் கூடாது என்று கட்டுப்பாடு
விதித்தேன். இது     எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை
ஊன்றிவிட்டது. நான்   விதித்திருந்த   கட்டுப்பாடு    உண்மையில்
அவளுக்கு ஒரு வகையான