பக்கம் எண் :

122சத்திய சோதனை

Untitled Document
விருந்தினரே. ஆகையால், உங்களுக்கு எந்தவிதமான செலவும் இராது”
என்றார்.

     “என் சேவை உங்களுக்கு எவ்வளவு காலத்திற்குத்   தேவை?
நீங்கள் அதற்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டேன்.

     “ஓர் ஆண்டுக்கு       மேல் தேவைப்படாது.  உங்களுக்குப்
போகவர, முதல் வகுப்புக் கப்பல் கட்டணமும்,       மற்ற எல்லாச்
செலவும் போக 105 பவுனும் தருகிறோம்” என்றார்.

     நான்   அங்கே போவது,    பாரிஸ்டர் என்ற முறையிலேயே
அன்று.   அந்தக் கம்பெனியின் ஊழியன்    என்ற வகையிலேயே
போகிறேன். ஆனால், எப்படியாவது  இந்தியாவிலிருந்து போய் விட
வேண்டும் என்று       விரும்பினேன்.  அதோடு புதிய நாட்டைப்
பார்க்கலாம் ; புதிய அனுபவங்களைப் பெறலாம் என்ற   ஆசையும்
இருந்தது. மேலும் 105 பவுனையும் என்    சகோதரருக்கு அனுப்பி,
குடும்பச் செலவுக்கு உதவி செய்யலாம்.     எந்தவிதமான பேரமும்
பேசாமல்      ஒப்புக்கொண்டு,         தென்னாப்பிரிக்காவுக்குப்
புறப்படுவதற்குத் தயாரானேன்.

6. நேட்டால் சேர்ந்தேன்

     இங்கிலாந்திற்குப் புறப்பட்டபோது  பிரிவாற்றாமையால் என்ன
மனக்கஷ்டம் இருந்ததோ,   அத்தகைய       உணர்ச்சியெல்லாம்
இப்பொழுது தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்ட    போது இல்லை.
என் தாயாரோ காலமாகிவிட்டார்.       எனக்குக் கொஞ்சம் உலக
அனுபவமும் ஏற்பட்டுவிட்டது. ராஜ் கோட்டிலிருந்து   பம்பாய்க்குப்
போவதும் இப்பொழுது மிகச் சாதாரணமாகவே இருந்தது.

     இத் தடவை, மனைவியை     விட்டுப் பிரிந்து போகிறோமே
என்பதைப்பற்றி மாத்திரமே எனக்கு மனக்கஷ்டம்  இருந்தது. நான்
இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர்,    எங்களுக்கு மற்றும் ஒரு
குழந்தை பிறந்தது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு,
காமக் கலப்பு இல்லாதது என்று இன்னும்      சொல்லிவிடுவதற்கு
இல்லை. என்றாலும், அது நாளுக்கு நாள்    தூய்மையாகி வந்தது.
ஐரோப்பாவிலிருந்து நான் திரும்பி வந்த பிறகு,  நாங்கள் இருவரும்
சொற்பகாலமே சேர்ந்து     வாழ்ந்திருக்கிறோம். அவ்வளவு அதிக
சிரத்தையுடன் இல்லை என்றாலும் நான் அப்பொழுது   அவளுக்கு
ஆசிரியன் ஆகியிருந்தேன். சில சீர்திருத்தங்களை  அடைவதற்கும்
அவளுக்கு உதவி செய்து வந்தேன். அந்த     சீர்திருத்தங்களைத்
தொடர்ந்து அடைவதென்றால், நாங்கள்     இருவரும் அதிகமாகச்
சேர்ந்து வாழ்ந்து  வரவேண்டியது அவசியம் என்பதை இருவருமே
உணர்ந்தோம். ஆனால், தென்னாப்பிரிக்கா     செல்வதில் ஏற்பட்ட
கவர்ச்சி, பிரிந்து வாழ்வதையும் சகிக்கக் கூடியதாக்கியது. அவளுக்கு
ஆறுதலாக இருப்பதற்காக, “நாம் எப்படியும் ஓர் ஆண்டில் மீண்டும்