பக்கம் எண் :

ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு121

Untitled Document
எனக்குத் தோன்றியது.

     எனவே,இந்த வேலையிலும் நான் ஏமாற்றத்தையே அடைந்தேன்
என்று சொல்ல வேண்டும்.  என் கட்சிக்காரர்களுக்கு       நியாயம்
வழங்கப்படவில்லை என்று  எண்ணினேன். ஆனால்,      அவர்கள்
நியாயத்தை அடையும்படி செய்வதற்கான   சக்தி என்னிடம் இல்லை.
நான் மேற்கொண்டு ஏதாவது              செய்வதென்றால் ராஜீய
ஏஜெண்டிடமோ, கவர்னரிடமோ முறையிட்டுக்கொள்ளலாம். ஆனால்,
அவர்களோ,     ‘இதில் நாங்கள் தலையிடுவதற்கில்லை’ என்று என்
அப்பீலை      நிராகரித்து     விடுவார்கள்.  இத்தகைய முடிவுகள்
சம்பந்தமாக   அனுசரிக்க,   விதிமுறை ஏதாவது இருந்தால், அதைக்
கொண்டாவது     ஏதாவது செய்து பார்க்கலாம். ஆனால்,  இங்கோ,
துரையின் இஷ்டமே சட்டம் என்று இருக்கிறது.    இதனால் எனக்கு
உண்டான ஆத்திரத்தைச் சொல்லி முடியாது.

     இதற்கு மத்தியில்   போர்பந்தரைச் சேர்ந்த      ஒரு மேமன்
வியாபாரக்     கம்பெனியார்,  என் சகோதரருக்கு      ஒரு கடிதம்
எழுதியிருந்தார்கள். அதில் அவர்கள்         அறிவித்திருந்ததாவது:
“தென்னாப்பிரிக்காவில்   எங்களுக்கு        வியாபாரம் இருக்கிறது.
எங்களுடையது பெரிய வியாபாரக் கம்பெனி.  எங்களுடைய  பெரிய
வழக்கு ஒன்று,   அங்கே கோர்ட்டில் நடக்கிறது.  40,000 பவுன் வர
வேண்டும் என்பது எங்கள் தாவா. இந்த வழக்கு    நீண்ட காலமாக
நடந்து        கொண்டு    வருகிறது.  பெரிய    வக்கீல்களையும்
பாரிஸ்டர்களையும் அமர்த்தியிருக்கிறோம்.      உங்கள் சகோதரரை
அங்கே அனுப்புவீர்களானால் எங்களுக்கும்    உதவியாக இருக்கும்;
அவருக்கும்     உதவியாக இருக்கும். வக்கீல்களுக்கு விஷயங்களை
எடுத்துக்கூற,   எங்களைவிட   அவரால் நன்கு முடியும்.  அதோடு,
உலகத்தில்    புதியதொரு  பகுதியைப்     பார்க்கும்     வாய்ப்பு
ஏற்படுவதோடு புதிதாகப்       பலருடன் பழகும்     சந்தர்ப்பமும்
அவருக்குக் கிடைக்கும்.”

     இந்த யோசனையைக் குறித்து,     என் சகோதரர் என்னுடன்
விவாதித்தார்.         வக்கீல்களுக்கு நான் விஷயங்களை எடுத்துச்
சொல்ல மாத்திரம் வேண்டியிருக்குமா,       கோர்ட்டிலும் ஆஜராக
வேண்டியிருக்குமா   என்பது          எனக்குத் தெளிவாகவில்லை.

     மேலே சொன்ன தாதா       அப்துல்லா கம்பெனியின்   ஒரு
கூட்டாளியான, காலஞ்சென்ற    சேத் அப்துல் கரீம் ஜவேரியை, என்
சகோதரர் எனக்கு அறிமுகம் செய்து      வைத்தார். “இந்த வேலை
கஷ்டமானதாக இராது” என்று சேத்        எனக்கு உறுதி கூறினார்.
“பெரிய     வெள்ளைக்காரர்களெல்லாம்        எங்கள் நண்பர்கள்.
அவர்களுடன்     நீங்கள் பழக்கம்    செய்து கொள்ளலாம். எங்கள்
கடைக்கும்   நீங்கள்              பயன்படுவீர்கள். எங்கள் கடிதப்
போக்குவரத்தெல்லாம் பெரும்பாலும்     ஆங்கிலத்தில்தான். அதிலும்
நீங்கள் எங்களுக்கு உதவி செய்யலாம். நீங்கள் எங்கள்