பக்கம் எண் :

16சத்திய சோதனை

Untitled Document
அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக  அழுதேன்.
முதல் வகுப்பிலோ, இரண்டாம்    வகுப்பிலோ படித்தபோது நடந்தது
அது. நான் ஏழாம் வகுப்பில்         படித்துக் கொண்டிருந்த போது
அத்தகைய மற்றொரு சம்பவம்     நிகழ்ந்தது. அச்சமயம் தோராப்ஜி
எதுல்ஜி ஜிமி தலைமையாசிரியராக இருந்தார். மாணவர்களுக்கெல்லாம்
அவரிடம் அதிகப் பிரியம். அதே    சமயத்தில் கட்டுத் திட்டங்களில்
மிகக் கண்டிப்பானவர்; குறிப்பிட்ட        முறைப்படி காரியங்களைச்
செய்பவர்; நன்றாகப் போதிப்பவருங்கூட       அவர் மேல் வகுப்புப்
பையன்களுக்குத்     தேகாப்பியாசத்தையும்,       கிரிக்கெட்டையும்
கட்டாயமாக்கி விட்டார். இந்த    இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை.
இவை கட்டாயமாக்கப் படுவதற்கு    முன்னால் நான் தேகாப்பியாசம்
செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ  இல்லை.
ஒன்றிலும் சேராமல்   நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த
கூச்சம் ஒரு காரணம். அப்படி      இருந்து விட்டது தவறு என்பதை
இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும்  தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே
இல்லை என்ற தவறான கருத்தும்     அப்பொழுது எனக்கு இருந்தது.
ஆனால், இன்று, பாடத் திட்டத்தில்  மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம்
அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு      உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட
வேண்டும் என்பதை அறிவேன்.

     என்றாலும், தேகப் பயிற்சியில்    கலந்து கொள்ளாமல் இருந்து
விட்டதனால் எனக்கு அதிகத் தீமை   எதுவும் ஏற்பட்டு விடவில்லை
என்றும் கூறுவேன். இதற்கு ஒரு  காரணம் உண்டு. திறந்த வெளியில்
நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்    கூடிய நன்மைகளைக் குறித்துப்
புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த           யோசனை எனக்குப்
பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும்     பழக்கம் எனக்கு ஏற்பட்டது.
அப்பழக்கம் இன்னும்      எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என்
உடல் நன்கு வலுப்பெற்றது.

     தேகாப்பியாச  வகுப்புக்குப் போக      நான் விரும்பாததற்குக்
காரணம், என்    தந்தைக்குப் பணிவிடை    செய்யவேண்டும் என்று
எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும்,     நேரே
அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப்    பணிவிடை செய்வேன்.
இந்தச்         சேவை செய்வதற்குக்      கட்டாயத் தேகப்பயிற்சி
இடையூறாக இருந்தது. என்      தந்தைக்கு நான் பணிவிடை செய்ய
வேண்டும் ஆகையால்      தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க
அனுமதிக்குமாறு திரு ஜிமியிடம்   கோரினேன். ஆனால், அவர் என்
வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள        மறுத்துவிட்டார். ஒரு நாள்
சனிக்கிழமை;அன்று   காலையில்        பள்ளிக்கூடத்திற்குப் போக
வேண்டும். மாலை 4  மணிக்குத்          தேகப் பயிற்சிக்காக நான்
வீட்டிலிருந்து திரும்பவும்      பள்ளிக்கூடம் போக வேண்டும். நான்