பக்கம் எண் :

166சத்திய சோதனை

Untitled Document
நண்பர்களுக்கும்        எழுதினேன். அவர்களில் ஒருவர், எட்வர்டு
மெய்ட்லண்டுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடனும்
கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டேன்.   ‘பரிபூரணமான வழி’
என்ற நூலை அவர் எனக்கு அனுப்பினார். அன்னா கிங்ஸ்போர்டுடன்
சேர்ந்து, அவர் இந்நூலை எழுதியிருந்தார்.இப்பொழுது இருந்து வரும்
கிறிஸ்தவ நம்பிக்கைகளை இந்நூல் மறுக்கிறது.   ’பைபிளுக்குப் புதிய
வியாக்கியானம்’ என்ற      மற்றொரு புத்தகத்தையும் அவர் எனக்கு
அனுப்பினார். அவ்விரு     புத்தகங்களுமே எனக்குப் பிடித்திருந்தன.
அவை,      ஹிந்து தருமத்தை       ஆதரிப்பனவாகத் தோன்றின.
‘உன்னுள்ளேயே ஆண்டவன் ராஜ்யம்’ என்ற    டால்ஸ்டாயின் நூல்,
என்னைப்     பரவசப்படுத்தி விட்டது.   அதில் கண்ட கருத்துக்கள்
என்      உள்ளத்தில்   பலமாகப் பதிந்துவிட்டன. அந்நூலில் கண்ட
சுயேச்சையான   சிந்தனை,    மிகச் சிறந்த     ஒழுக்கம், உண்மை
ஆகியவற்றின் முன்பு     ஸ்ரீ கோட்ஸ்     எனக்குக் கொடுத்திருந்த
புத்தகங்கள்       எல்லாமே  ஒளி இழந்து,   அற்பமானவைகளாகத்
தோன்றின. இவ்விதம் என்னுடைய ஆராய்ச்சி,  கிறிஸ்தவ நண்பர்கள்
எதிர்பாராத திக்குக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது.   எட்வர்டு
மெயிட்லண்டுடன் நீண்ட காலம்     கடிதப் போக்குவரத்து வைத்துக்
கொண்டிருந்தேன். ராய்ச்சந்திர பாய் இறக்கும் வரையில் அவருடனும்
கடிதப் போக்குவரத்து வைத்திருந்தேன்.      அவர் அனுப்பிய சில
புத்தகங்களையும் படித்தேன்.    பஞ்சீகரணம்,    மணிரத்தினமாலை,
யோகவாசிஷ்டத்தின்    முமுட்சுப்பிரகணம்,   ஹரிபத்ர சூரியின் சத்
தரிசன     சமுச்சயம்   முதலியவைகளும் அவைகளில் சேர்ந்தவை.

     என்   கிறிஸ்தவ நண்பர்கள்   எதிர்பாராத ஒரு வழியை நான்
மேற்கொண்டேனாயினும்,   என்னுள்      அவர்கள் எழுப்பிய சமய
வேட்கைக்காக          நான்   அவர்களுக்கு என்றும் கட்டுப்பாடு
உடையவனாக    இருக்கிறேன்.  அவர்களுடன்  பழகியதைப் பற்றிய
நினைவை நான் என்றும் போற்றி வருவேன். இத்தகைய இனிமையான,
புனிதமான    தொடர்புகள், அதற்குப் பின்னாலும் எனக்கு அதிகமாக
இருந்தனவே அன்றிக் குறையவில்லை.

16. நானொன்று நினைக்கத் தெய்வமொன்று
நினைத்தது

     வழக்கு  முடிவடைந்துவிட்டதால்   நான்   பிரிட்டோரியாவில்
இருப்பதற்கு       எந்தவிதமான     காரணமும் இல்லை. ஆகவே,
நான்டர்பனுக்குத் திரும்பினேன்.   தாய்நாட்டுக்குப் புறப்படுவதற்கான
ஏற்பாடுகளைச்     செய்யலானேன்.  ஆனால்,    அப்துல்லா சேத்,