பக்கம் எண் :

நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது 167

Untitled Document
பிரிவுபசாரம் எதுவும் இல்லாமல்    என்னை அனுப்பிவிட இசைபவர்
அல்ல.  சைடன்ஹாமில் அவர்    எனக்கு ஒரு பிரிவுபசார விருந்து
நடத்தினார்.

     அன்று, நாள் முழுவதையும்     அங்கேயே கழிப்பது என்பது
ஏற்பாடு.    அங்கே கிடந்த   பத்திரிகைகளை      நான் புரட்டிக்
கொண்டிருக்கையில், அதில் ஒன்றின் ஒரு   மூலையில், ‘இந்தியரின்
வாக்குரிமை‘ என்ற தலைப்பில் ஒரு சிறு செய்தி     என் கண்ணில்
பட்டது. அப்பொழுது சட்டசபை முன்பிருந்த     ஒரு மசோதாவைப்
பற்றியது,   அச்செய்தி. நேட்டால்   சட்டசபைக்கு   மெம்பர்களைத்
தேர்ந்தெடுக்க இந்தியருக்கு இருந்த   உரிமையைப் பறிப்பதற்கென்று
கொண்டுவரப்பட்டது, இந்த மசோதா.அம்மசோதாவைப் பற்றி எனக்கு
ஒன்றுமே தெரியாது. விருந்துக்கு   வந்திருந்தவர்களுக்கும் தெரியாது.

     அதைக் குறித்து   அப்துல்லா சேத்தை  விசாரித்தேன். அவர்
கூறியதாவது: “இந்த      விஷயங்களைப்பற்றியெல்லாம் எங்களுக்கு
என்ன தெரிகிறது? எங்கள்      வியாபாரத்தைப் பாதிக்கும் விஷயம்
மாத்திரமே       எங்களுக்குப் புரிகிறது.  ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில்
எங்களுடைய   வியாபாரமெல்லாம்        அடியோடு போய்விட்டது
என்பதை நீங்கள் அறிவீர்கள், அதைக் குறித்துக் கிளர்ச்சி செய்தோம்;
ஒன்றும் பயனில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருப்பதால்
நாங்கள்   முடவர்களாகத்தான் இருக்கிறோம்.   அன்றாட மார்க்கெட்
நிலவரம் போன்றவைகளைத்     தெரிந்துகொள்ளுவதற்கு மாத்திரமே
பொதுவாக நாங்கள்      பத்திரிகைகளைப் பார்க்கிறோம். சட்டங்கள்
செய்யப்படுவதைக் குறித்து எங்களுக்கு என்ன தெரியும்.எங்களுக்குக்
கண்களாகவும்      காதுகளாகவும் இருப்பவர்கள்     இங்கிருக்கும்
ஐரோப்பிய அட்டர்னிகளே.”

     “இங்கே பிறந்து, படித்தும் இருக்கும் வாலிப இந்தியர்கள் பலர்
இருக்கிறார்கள். அவர்கள்    உங்களுக்கு உதவி செய்வதில்லையா?”
என்று கேட்டேன். “அவர்களா?” என்று மனம் சோர்ந்து அப்துல்லா
சேத் கேட்டார்.’’ அவர்கள்      எங்களைப் பொருட்டாக நினைத்து
எங்களிடம்     வருவதே     இல்லை.   உங்களிடம் உண்மையைச்
சொல்லுகிறேன்.    அவர்களை   நாங்களும் சட்டை செய்வதில்லை.
அவர்கள்    கிறிஸ்தவர்களாதலால்   வெள்ளைக்காரப் பாதிரிகளின்
கைக்குள்    இருக்கின்றனர்.    அப்பாதிரிகளோ,  அரசாங்கத்திற்கு
உட்பட்டவர்கள்” என்றார்.

     அவர் இவ்விதம் கூறியது என்    கண்களைத் திறந்தது. இந்த
வகுப்பினரை      ‘நம்மவர்கள்’   என்று நாம் உரிமை கொண்டாட
வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.    கிறிஸ்தவம் என்பதற்குப்
பொருள் இதுதானா? அவர்கள்     கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டதனால்