பக்கம் எண் :

176சத்திய சோதனை

Untitled Document
வக்கீலாக இருப்பவர் ஒருவர்   மூலமாக     இம்மனுவைக் கொடுக்க
வேண்டும்.  எத்தகைய கட்டணமும் வாங்கிக் கொள்ளாமல் அட்டர்னி
ஜெனரல் இத்தகைய    மனுக்களைச் சமர்ப்பிப்பதுதான் வழக்கம். ஸ்ரீ
எஸ்கோம்பு,    தாதா அப்துல்லா கம்பெனிக்குச் சட்ட ஆலோசகராக
இருந்தார்      என்பதை முன்பே படித்தோம்.  அவரே இப்பொழுது
அட்டர்னி ஜெனரல். அவரிடம் சென்றேன்.   அவரும் என் மனுவைக்
கோர்ட்டில் சமர்ப்பிக்க மனம் உவந்து ஒப்புக்கொண்டார்.

     நான் எதிர்பாராத விதமாக   வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்க்கக்
கிளம்பினர்.    என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான்
கொடுத்திருந்த      மனுவை     எதிர்த்து,   எனக்கு ஒரு தாக்கீது
அனுப்பினார்கள். நேட்டால் வக்கீல் சங்கத்தினர்   வெளிப்படையாகக்
கூறிய ஓர் ஆட்சேபம், இங்கிலாந்தில் பெற்ற      அசல் அத்தாட்சிப்
பத்திரத்தை   மனுவுடன்    நான்   தாக்கல் செய்யவில்லை என்பது.
ஆனால், அவர்களுக்கு இருந்த முக்கியமான ஆட்சேபம், ஒரு கருப்பு
மனிதனும் அட்வகேட்டாகப் பதிவு செய்துகொள்ள மனுப்போடக்கூடும்
என்பதை, அட்வகேட்டுகளை அனுமதிப்பது சம்பந்தமான விதிகளைச்
செய்தபோது சிந்தித்திருக்க முடியாது    என்பதுதான். ஐரோப்பியரின்
முயற்சியால்தான்        நேட்டால்    இன்று        வளம் பெற்று
வளர்ந்திருக்கிறதாகையால்,     வக்கீல் தொழிலிலும் ஐரோப்பியர்களே
ஆதிக்கம்      செலுத்த வேண்டும்.  வெள்ளையர் அல்லாதவரையும்
இத்தொழிலுக்குள் வர    விட்டுவிட்டால்,  நாளாவட்டத்தில் அவர்கள்
தொகை ஐரோப்பிய  வக்கீல்களின் தொகையைவிட அதிகமாகி விடும்.
அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரண் தகர்ந்துவிடும்.  இதுவே
அவர்களுடைய முக்கியமான ஆட்சேபம்.

     தங்களுடைய எதிர்ப்பை ஆதரித்து, வாதாட   ஒரு பிரபலமான
வக்கீலை, வக்கீல்கள் சங்கத்தினர்      அமர்த்தியிருந்தார்கள். அந்த
வக்கீலும் தாதா அப்துல்லா கம்பெனியுடன் தொடர்புள்ளவர். ஆகவே,
தம்மை வந்து   பார்க்குமாறு சேத் அப்துல்லா மூலம் அவர் எனக்குச்
சொல்லியனுப்பினார். நான் போனேன். அவர்       என்னிடம் மனம்
விட்டுப் பேசினார்.     என்னுடைய பூர்வோத்தரங்களை விசாரித்தார்.
சொன்னேன். பிறகு அவர் கூறியதாவது:

     “உமக்கு விரோதமாக நான் சொல்லக் கூடியது எதுவும் இல்லை.
குடியேற்ற நாட்டில் பிறந்த, எதற்கும் துணிந்துவிடும் ஓர்  ஆசாமியாக
நீர் இருப்பீரோ என்றுதான்    நான் பயந்தேன். அசல் அத்தாட்சியை
உம்முடைய      மனுவுடன்   நீர் அனுப்பாதது   என் சந்தேகத்தை
அதிகமாக்கியது.    மற்றவர்களுடைய  அத்தாட்சிப்  பத்திரங்களைத்
தங்களுடையவை எனக்காட்டி ஏமாற்றுபவர்களும்