பக்கம் எண் :

தாய் நாடு நோக்கி 199

Untitled Document
24. தாய் நாடு நோக்கி

     நான்      தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, இப்பொழுது மூன்று
ஆண்டுகள் ஆயின.          அங்கிருந்த மக்களை நான் தெரிந்து
கொண்டேன்: அவர்களும் என்னை அறிந்து கொண்டார்கள். அங்கே
நான்    நீண்டகாலம் தங்க வேண்டியிருக்குமென்று கண்டதால் ஆறு
மாதங்களுக்கு    தாய்நாடு போய்வர      1896-இல் நான் அனுமதி
கேட்டேன். வக்கீல் தொழிலும்     நன்றாகவே நடந்து வந்தது. நான்
இருக்க வேண்டியது அவசியம்         என்று மக்கள் உணர்ந்தனர்
என்பதையும்        கண்டேன். ஆகவே, தாய் நாட்டிற்குச் சென்று,
மனைவியையும்     குழந்தைகளையும்  அழைத்துக்கொண்டு வந்து,
அங்கேயே தங்குவது என்று    தீர்மானித்துக் கொண்டேன். மேலும்,
தாய் நாட்டிற்குச் சென்றால்,      விஷயங்களைப் பொது மக்களுக்கு
எடுத்துக் கூறித்          தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர்
சம்பந்தமாக       அவர்களுக்கு  அதிகச் சிரத்தை உண்டாகும் படி
செய்து, ஏதாவது    பொதுவேலை செய்யலாம் என்றும் நினைத்தேன்.
மூன்று பவுன் வரி, ஆறாப் புண்ணாக இருந்து வந்தது.   அது ரத்துச்
செய்யப்படும் வரையில் அமைதி கிட்டுவதற்கில்லை.

     ஆனால், நான் இல்லாதபோது காங்கிரஸின்   வேலைகளையும்,
கல்விச் சங்கத்தையும்      ஏற்று நடத்துவது யார்?  இதற்குத் தகுதி
வாய்ந்தவர்களாக ஆதம்ஜி     மியாகான், பார்ஸி ருஸ்தம்ஜி ஆகிய
இருவரையே நான் நினைக்க முடியும். வர்த்தகர்கள் வகுப்பில் பொது
வேலையில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் அப்போது பலர்  இருந்தனர்.
ஆனால், அவர்களில்  ஒழுங்காக வேலை செய்து,   காரியதரிசியின்
கடமையை     நிறைவேற்றக் கூடியவர்களும்,  இந்தியர் சமூகத்தின்
மதிப்பைப்   பெற்றிருந்தவர்களும் அந்த இருவருமே. காரியதரிசியாக
இருப்பவருக்கு ஓரளவு ஆங்கிலம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
காங்கிரஸு க்குக் காலஞ் சென்ற     ஆதம்ஜி மியாகானின் பெயரைச்
சிபாரிசு செய்தேன்.     அவரைக்     காரியதரிசியாக நியமிப்பதைக்
காங்கிரஸு ம்    அங்கீகரித்தது.   அவரைத் தேர்ந்தெடுத்தது மிகவும்
சரியானது என்பது      பிறகு அனுபவத்தினால் தெரிந்தது. ஆதம்ஜி
மியாகான்,      விடாமுயற்சி உள்ளவர்;     தாராளமானவர்; இனிய
தன்மையுள்ளவர்;   மரியாதையுள்ளவர். அந்த நற்குணங்களால் அவர்
எல்லோருக்கும் திருப்தியளித்தார். அதோடு  காரியதரிசி வேலைக்குப்
பாரிஸ்டர் பட்டம் பெற்றவரோ,   அதிகமாக ஆங்கிலம் படித்தவரோ
தேவையில்லை என்பதையும்      அவர் எல்லோருக்கும் நிரூபித்துக்
காட்டி விட்டார்.

     1896-ஆம் ஆண்டு      மத்தியில்   கல்கத்தாவுக்குச் சென்ற,
பொங்கோலோ என்ற கப்பலில் நான் தாய் நாட்டிற்குப்