பக்கம் எண் :

தாய் நாடு நோக்கி 201

Untitled Document
ஒருவரை   நான் காணும்போது,     தென்னாப்பிரிக்காவில் இருக்கும்
அவர்களுடைய இனத்தினரான தமிழரும் தெலுங்கரும் காட்டிய விடா
முயற்சியையும் தன்னலமற்ற    தியாகத்தையும் நினைக்காமல் இருக்க
என்னால் முடிவதில்லை.   அவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்து
வாசனையே இல்லாதவர்கள்.      அவர்கள் பெண்களும் அப்படியே.
இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே  தென்னாப்பிரிக்கப் போராட்டம்.
எழுதப்    படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர்;
ஏழைகளுக்காக    நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப்
பங்கும் வகித்தனர். என் நாட்டினரான கள்ளங் கபடமற்ற அந்த நல்ல
மக்களின்    உள்ளங்களைக்    கொள்ளை        கொள்ளுவதற்கு,
அவர்களுடைய மொழி    எனக்குத் தெரியாதது    ஓர் இடையூறாக
இருந்ததே   இல்லை.  அரைகுறை   ஹிந்துஸ்தானியோ, அரைகுறை
ஆங்கிலமோ அவர்கள்     பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள்
வேலைகளைச் செய்து கொண்டு போவதில்   எங்களுக்குக் கஷ்டமே
தோன்றியதில்லை.       ஆனால்,    அவர்கள் என்னிடம் காட்டிய
அன்புக்கு நன்றியறிதலாகத் தமிழும் தெலுங்கும் கற்றுக்கொண்டு விட
வேண்டும்    என்று விரும்பினேன்.   முன்பே நான் கூறியது போல்,
தமிழ்க் கல்வியில்      கொஞ்சம் அபிவிருத்தியடைந்தேன். ஆனால்,
இந்தியாவில்     தெலுங்கு  கற்றுக் கொள்ள       முயன்றும் நான்
நெடுங்கணக்கைத் தாண்டி அப்பால் போகவில்லை.   இம்மொழிகளை
நான்    இனி    கற்றுக் கொள்ளவே முடியாது என்று  இப்பொழுது
ஞ்சுகிறேன். ஆகையால்,      திராவிடர்கள்   ஹிந்துஸ்தானி கற்றுக்
கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.         தென்னாப்பிரிக்காவில்
இருக்கும் இவர்களில்           ஆங்கிலம் தெரியாதவர்கள், தட்டுத்
தடுமாறியேனும் ஹிந்தி    அல்லது     ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள்.
ஆங்கிலம் பேசுகிறவர்கள் மாத்திரமே-    ஆங்கிலம் தெரிந்திருப்பது
நமது சொந்த மொழிகளை      அறிந்து கொள்ளுவதற்குத் தடையாக
இருப்பது போலவே ஹிந்தி கற்றுக் கொள்ளுவதில்லை.

     நான்      விஷயத்தை விட்டு  எங்கோ போய்விட்டேன். என்
பிரயாண விவரத்தைக் கூறி முடித்து விடுகிறேன்.    ‘பொங்கோலா’க்
கப்பலின் காப்டனை நான்    உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க
வேண்டும். நாங்கள்   நண்பர்கள் ஆனோம்.   அந்த நல்ல காப்டன்,
பிளிமத் சகோதரர்கள் என்ற    கிறிஸ்துவ கோஷ்டியைச் சேர்ந்தவர்.
கப்பல் ஓட்டும் விஷயத்தைக் காட்டிலும்,   எங்கள் பேச்சு, அதிகமாக
ஆன்மிக   விஷயங்களைப் பற்றியதாகவே இருந்தது. ஒழுக்கத்திற்கும்
சமயத்திற்கும் நடுவே அவர்  ஒரு வரம்பை இட்டுவிட்டார். பைபிளில்
கண்ட உபதேசங்கள்        அவருக்குக் குழந்தை விளையாட்டாகத்
தோன்றின. ‘அதன் அழகு,