பக்கம் எண் :

204சத்திய சோதனை

Untitled Document
துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறேன். அவற்றில்
இருந்ததைவிட     இதில்     நிதானமான         பாஷையையே
உபயோகித்திருந்தேன்.ஏனெனில், ஒரு  விஷயத்தைத் தூரத்திலிருந்து
கேள்விப்படும் போது   உள்ளதையும்    விடப் பெரியதாகவே அது
தோன்றி விடுகிறது என்பதை நான் அறிவேன்.

     பத்தாயிரம் பிரதிகள்    அச்சிட்டேன்.  இந்தியாவின் எல்லாப்
பகுதிகளிலும்   இருக்கும்    பத்திரிகைகளுக்கும் தலைவர்களுக்கும்
அதை அனுப்பினேன்.அதைக் குறித்து முதலில் தலையங்கம் எழுதிய
பத்திரிகை, ‘பயோனீர்’. அத் தலையங்கத்தின்  சுருக்கத்தை ராய்ட்டர்
செய்தி    ஸ்தாபனம்    இங்கிலாந்துக்குத் தந்தி மூலம் அனுப்பியது.
அந்தச் சுருக்கத்திற்கு       ஒரு சுருக்கத்தை ராய்ட்டரின் லண்டன்
காரியாலயம் நேட்டாலுக்கு அனுப்பிற்று.      அந்தத் தந்தி, அச்சில்,
மூன்று வரிக்கு      மேல் இல்லை. செய்தி,   அவ்வளவு சிறியதாக
இருந்தாலும், நேட்டாலில்      இந்தியர்கள் நடத்தப்படும் விதத்தைக்
குறித்து, நான் கூறியதை அச் செய்தி     மிகைப்படுத்திக் கூறுவதாக
இருந்தது. மேலும், அச் செய்தி     என் வார்த்தைகளைக் கொண்டு
வரையப்பட்டதாகவும்       இல்லை.   நேட்டாலில் இதன் விளைவு
என்னவாயிற்று    என்பதைப் பிறகு கவனிப்போம். இதற்கு மத்தியில்,
முக்கியமான பத்திரிகைகள் எல்லாமே   இப் பிரச்னையைக் குறித்து,
விரிவாக அபிப்பிராயங்கள் கூறின.

     இத் துண்டுப் பிரசுரங்களைத் தபாலில்  அனுப்புவதற்குத் தயார்
செய்வது சுலபமான வேலையே அல்ல. இவற்றைக் காகிதம் போட்டுச்
சுற்றி அனுப்புவது போன்ற   வேலைகளுக்குக் கூலி கொடுத்து ஆள்
அமர்த்தினால் அதிகச் செலவு        ஆகியிருக்கும். ஆகவே, மிக
எளிதான உபாயம் ஒன்றைக்    கண்டுபிடித்தேன். பக்கத்தில் இருந்த
குழந்தைகளையெல்லாம் திரட்டினேன். பள்ளிக்கூடம்  இல்லாதபோது
காலையில் இரண்டு, மூன்று மணி நேர   உழைப்பை வலிய அளிக்க
முன்வருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.அப்படியே செய்ய
அவர்கள் மனம் உவந்து      ஒப்புக் கொண்டார்கள்.  அவர்களை
வாழ்த்தி, நான் சேர்த்து வைத்திருந்த  பழைய தபால் ஸ்டாம்புகளை
அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதாகவும் கூறினேன்.  குழந்தைகள்
கொஞ்ச   நேரத்தில்        வேலையை முடித்து விட்டார்கள். சிறு
குழந்தைகளைத்     தொண்டர்களாக உபயோகிப்பதில் இதுவே என்
முதல் பரீட்சை.       அக் குழந்தைகளில் இருவர் இன்று என் சக
ஊழியர்களாக இருக்கின்றனர்.

     அச் சமயம் பம்பாயில்     பிளேக் நோய் பரவியது. இதனால்,
சுற்றுப்புறங்களில் எல்லாம்    ஒரே பீதி ஏற்பட்டது. ராஜ்கோட்டிலும்
அந்த      நோய் பரவிவிடும்  என்ற பயம்     இருந்தது. சுகாதார
இலாகாவுக்கு நானும் கொஞ்சம்       உதவியாக இருக்கலாம் என்று