பக்கம் எண் :

இந்தியாவில் 205

Untitled Document
எண்ணினேன்.      சேவை செய்யத் தயார் என்று அரசாங்கத்திற்கு
அறிவித்தேன். அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.  அதன் பேரில் இது
சம்பந்தமாகக் கவனிக்க      நியமித்த ஒரு கமிட்டியில் என்னையும்
சேர்த்தனர். கக்கூசுகளைச்  சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று
நான் முக்கியமாக        வற்புறுத்தினேன்.   ஒவ்வொரு தெருவிலும்
கக்கூசுகள் இருக்கும் நிலையைப் போய்ப்    பார்வையிடுவது என்று
கமிட்டி முடிவு செய்தது. தங்கள் கக்கூசுகளைப் போய்ப்  பார்ப்பதை,
ஏழைகள்   ஆட்சேபிக்கவில்லை. நாங்கள் கூறிய யோசனைகளையும்
அவர்கள் நிறைவேற்றிக்        கக்கூசுகளைச் சுத்தமாக வைத்தனர்.
ஆனால், பணக்காரர்கள் வீட்டுக்     கக்கூசுகளைப் பார்க்க நாங்கள்
சென்றபோது,     அவர்களில் சிலர்,   நாங்கள் அவற்றைப் பார்க்க
அனுமதிக்கக்கூட        மறுத்து விட்டனர். அப்படியிருக்க, நாங்கள்
கூறிய யோசனையை      அவர்கள் காது கொடுத்துக் கேட்டார்களா
என்பதைப்பற்றிச் சொல்லவே      வேண்டியதில்லை. பணக்காரர்கள்
வீட்டுக் கக்கூசுகளே அதிக ஆபாசமாக   இருந்தன என்பது எங்கள்
பொதுவான அனுபவம். அவை இருண்டிருந்தன;    ஒரே துர் நாற்றம்;
ஒரே ஆபாசம், புழுக்களும்    நெளிந்துகொண்டிருந்தன. செய்யுமாறு
நாங்கள் கூறிய அபிவிருத்திகள்  மிகச்     சுலபமானவை. அதாவது,
கழிக்கும் மலம் தரையில் விழாதவாறு அதற்குத் தொட்டி வைக்குமாறு
கூறினோம். மூத்திரமும் தரையில் விழுந்து, அந்த   இடம் ஒரே ஈரம்
ஆகிவிடாமல் அதையும்     தொட்டியில் பிடிக்கும்படி சொன்னோம்.
கக்கூசுகளில்     வெளிச்சமும்   காற்றோட்டமும் இருப்பதற்காகவும்,
அவற்றைத்     தோட்டி நன்றாகச்    சுத்தம் செய்வதற்கு வசதியாக
இருப்பதற்காகவும்     வெளிச் சுவருக்கும்    கக்கூசுக்கும் மத்தியில்
இருக்கும் சிறு சிறு       தடுப்புக்களையெல்லாம் இடித்து விடுமாறும்
கேட்டுக் கொண்டோம்.   இந்தக்       கடைசிச் சீர்திருத்தத்திற்குப்
பணக்காரர்கள் ஏராளமான ஆட்சேபங்களைக் கூறினார்கள். அநேகர்
நாங்கள் கூறியதைப் பின் பற்றி எதுவுமே செய்யவில்லை.

     தீண்டாதார் குடியிருந்த வீடுகளையும் கமிட்டி போய்ப்  பார்க்க
வேண்டியிருந்தது.       அங்கே   என்னுடன் வருவதற்குக் கமிட்டி
அங்கத்தினர்களில்      ஒருவர்   மாத்திரமே   தயாராக இருந்தார்.
மற்றவர்களோ, அவ்வீடுகளுக்குப் போவது என்பதே மகா  பாதகமான
காரியம் என்று நினைத்தனர். அதிலும்,   அவர்களுடைய கக்கூசைப்
போய்ப் பார்ப்பது, இன்னும் அதிக  மோசமானது என்று எண்ணினர்.
ஆனால்,     அவ்வகுப்பினரின்      இருப்பிடங்களைப் பார்த்ததும்
நான்        ஆச்சரியமும்  மகிழ்ச்சியும் அடைந்தேன். அத்தகைய
பகுதிகளுக்கு   நான் சென்றது அதுதான் முதல் தடவை. அங்கிருந்த
ஆண்களும் பெண்களும் நாங்கள்