பக்கம் எண் :

206சத்திய சோதனை

Untitled Document
வந்ததைப்     பார்த்து ஆச்சரியம்  அடைந்தனர்.  அவர்களுடைய
கக்கூசுகளைப்   பார்க்க வேண்டும்        என்று நான் கேட்டேன்.
“எங்களுக்கும் கக்கூசுகளா!” என்று   அவர்கள் வியந்தார்கள். பிறகு,
வெளியே திறப்பான  இடங்களில் நாங்கள்         போய் மலஜலம்
கழித்துவிடுவோம். உங்களைப் போன்ற பெரிய  மனிதர்களுக்கல்லவா
கக்கூசு!” என்றனர்.

     “சரி, அப்படியானால் உங்கள்     வீட்டுக்குள் வந்து, நாங்கள்
பார்ப்பதைப்பற்றி       உங்களுக்கு ஆட்சேபம் இல்லை அல்லவா?”
என்று கேட்டேன்.

     “நன்றாக வாருங்கள்; வந்து பாருங்கள், ஐயா. எங்கள் வீடுகளின்
ஒவ்வொரு மூலை முடுக்கையும் நீங்கள் பார்க்கலாம். எங்கள் வீடுகள்,
வீடுகளா? அவை வளைகள்!” என்றனர்.

     உள்ளே போனேன். வெளிப்புறத்தில்    இருப்பதைப் போலவே
உள்ளேயும்   சுத்தமாக இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.
வாசல்களையும்    நன்றாக வைத்து இருந்தனர்.   தரையைச் சாணம்
கொண்டு அழகாக மெழுகி இருந்தனர்.  அங்கே இருந்த பானைகளும்
தட்டுகளும்         கொஞ்சம்தான்.  என்றாலும் அவை சுத்தமாகவும்
பளபளப்பாகவும் இருந்தன. அப்பகுதியில்   பிளேக் நோய் பரவிவிடும்
என்ற பயமே இல்லை.

     மேல் சாதியினர் வசிக்கும் பகுதியில் நாங்கள்  ஒரு கக்கூசைப்
பார்த்தோம். அதைப்பற்றிக்      கொஞ்சம் சொல்லாமல் இருப்பதற்கு
இல்லை. வீட்டின்    ஒவ்வோர் அறைக்கும் ஒரு ஜலதாரை இருந்தது.
தண்ணீர் விடவும்      மூத்திரம்    கழிக்கவும்    அந்த ஜலதாரை
உபயோகிக்கப்பட்டது.        அதனால் வீடு முழுவதுமே துர்நாற்றம்
இருக்கும். நாங்கள்    பார்த்த வீடுகள் ஒன்றில்,  மாடியிலிருந்த ஒரு
படுக்கை அறையையும் பார்த்தோம். அதிலிருந்த ஜலதாரை,  மலஜலம்
இரண்டும் கழிக்கக்     கக்கூசாக உபயோகிக்கப்பட்டு வந்தது. அந்த
ஜலதாரை கீழே போக ஒரு குழாயும் இருந்தது. அந்த அறையிலிருந்த
துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு அங்கே    நிற்கவே முடியவில்லை.
அங்கே       எப்படித்தான்    படுத்துத் தூங்குகிறார்கள் என்பதை
வாசகர்களே சிந்தித்துப் பார்த்துக்கொள்ள விட்டுவிடுகிறேன்.

     வைஷ்ணவக் கோயிலுக்கும் கமிட்டி போய்ப் பார்த்தது. அந்தக்
கோயிலின் அர்ச்சகர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். ஆகவே,
எல்லாவற்றையும்    பார்த்து,    நாங்கள்       செய்ய   விரும்பும்
சீர்திருத்தங்களைக்    கூறலாம் என்று     அவர் ஒப்புக்கொண்டார்.
அக்கோயிலின்    ஒரு பகுதியை          அவர் கூடப் பார்த்ததே
இல்லை.     அந்த இடத்தில் தான்  குப்பை கூளங்களையும் எச்சில்
இலைகளையும்    சுவரைத் தாண்டி வீசிப்போட்டு விடுவது வழக்கம்.
காக்கைகளும் பருந்துகளும் அங்கே   எப்பொழுதும் இருந்து வந்தன.
கக்கூசுகளும்