பக்கம் எண் :

இரு ஆர்வங்கள்209

Untitled Document
முக்கியமாக அந்தக் கீதத்தின்   மேற்கண்ட வரிகளே அகிம்சையைப்
பற்றிய என் உணர்ச்சிக்கு முரணாக இருந்தன. என் அபிப்பிராயத்தை
டாக்டர் பூத்திடம்     தெரிவித்தேன்.  அகிம்சையில் நம்பிக்கையுள்ள
ஒருவர்,  அந்த வரிகளைப்பாடுவது சரியல்ல      என்பதை அவரும்
ஒப்புக்கொண்டார். விரோதிகள்’       என்று சொல்லப்படுகிறவர்கள்,
‘வஞ்சகர்’ களாகவும்      இருப்பார்கள் என்று         நாம் எப்படி
எண்ணிக்கொள்ளுவது? விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம்
தவறு  செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா? ஆண்டவனிடமிருந்து
நாம் நீதியையே கேட்கலாம்.  டாக்டர் பூத் என்     உணர்ச்சிகளைப்
பூரணமாக அங்கீகரித்தார். தமது  பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்று
புதியதொரு ராஜ வாழ்த்துக்கீதத்தையும் இயற்றினார். டாக்டர் பூத்தைக்
குறித்து மேற்கொண்டும் பிறகு கவனிப்போம்.

     ராஜவிசுவாசத்தைப்      போலவே,    நோயுற்றிருப்போருக்குப்
பணிவிடை செய்யவேண்டும் என்ற ஆர்வமும்  என் சுபாவத்திலேயே
ஆழ வேர்விட்டிருந்தது.  நண்பர்களாக      இருக்கட்டும், முன் பின்
தெரியாதவர்களாக   இருக்கட்டும்;  பிறருக்குப் பணிவிடை செய்வதில்
எனக்கு ஆசை அதிகம்.

     தென்னாப்பிரிக்க      இந்தியர்  சம்பந்தமான துண்டுப் பிரசுர
வேலையில் நான் ராஜ்கோட்டில்     தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம்,
பம்பாய்க்கு உடனே போய்த்         திரும்ப வேண்டிய  சந்தர்ப்பம்
நேரிட்டது.      தென்னாப்பிரிக்க  இந்தியர் விஷயமாக நகரங்களில்
பொதுக்கூட்டங்களை நடத்திப் பொதுமக்கள்     அந்த நிலைமையை
அறியும்படி செய்யவேண்டும்   என்பது என் நோக்கம். இதற்கு முதல்
நகரமாகப்         பம்பாயைத் தேர்ந்தெடுத்தேன்.  முதலில், நீதிபதி
ரானடேயைச் சந்தித்தேன்.     நான் சொன்னதை அவர் கவனமாகக்
கேட்டுக்கொண்டார்.     ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைச் சந்திக்குமாறு
கூறினார். அடுத்தபடியாக       நான் சந்தித்த நீதிபதியான பத்ருதீன்
தயாப்ஜியும் அதே    யோசனைதான் கூறினார்.  “நீதிபதி ரானடேயும்
நானும் உங்களுக்கு, அதிகமாக  எந்த உதவியும் செய்வதற்கு இல்லை.
எங்கள் நிலைமையை     நீங்கள் அறிவீர்கள். பொது விஷயங்களில்
நாங்கள் தீவிரப் பங்கு      எடுத்துக்கொள்ளுவதற்கில்லை. ஆனால்,
எங்கள்    ஆதரவு உங்களுக்கு உண்டு.   உங்களுக்குச் சரியானபடி
வழிகாட்டக் கூடியவர், ஸர் பிரோஸ்ஷா மேத்தாவே” என்றார்.

     நிச்சயமாக நானும்      ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைப் பார்க்க
வேண்டும்    என்றுதான் இருந்தேன்.  அவர் யோசனைப்படி நடந்து
கொள்ளுமாறு இப் பெரியவர்கள்   எனக்குப்      புத்திமதி கூறியது,
பொதுமக்களிடையே        ஸர் பிரோஸ்ஷாவுக்கு இருந்த மகத்தான
செல்வாக்கை நான் நன்றாக    அறிந்துகொள்ளும்படி செய்தது. பிறகு