பக்கம் எண் :

210சத்திய சோதனை

Untitled Document
அவரிடம் சென்றேன். அவர்  முன்னிலையில்    பயத்தால் திகைத்து
நின்றுவிட நான்    தயாராக இருந்தேன்.   பொதுமக்கள் அவருக்குக்
கொடுத்திருந்த பட்டங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ‘பம்பாயின்
சிங்கத்தை’,      ‘மாகாணத்தின் முடி சூடா மன்னரை’ நான் பார்க்க
வேண்டியிருக்கிறது என்பதையும்      அறிவேன். ஆனால், ‘மன்னர்’
முன்னெச்சரிக்கையுடன் என்னை  அடக்கி விடவில்லை. அன்புமிக்க
ஒரு தந்தை, தம்முடைய வயது வந்த மகனை எவ்விதம் சந்திப்பாரோ
அவ்வாறே என்னை அவர் சந்தித்தார்.    நான் அவரைச் சந்தித்தது,
ஹைகோர்ட்டில். அவர் காரியாலயத்தில் பல நண்பர்களும் சீடர்களும்
அவரைச்          சூழ்ந்து கொண்டிருந்தனர்.  ஸ்ரீ டி.ஈ. வாச்சாவும்
ஸ்ரீ காமாவும்        அங்கே இருந்தனர்.  ஸர் பிரோஸ்ஷா மேத்தா,
அவர்களுக்கு       என்னை     அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ
வாச்சாவைக் குறித்து முன்பே        கேள்விப்பட்டிருக்கிறேன். ஸர்
பிரஸ்ஷாவுக்கு அவர்     வலக்கரம் போன்றவர் என்று கருதப்பட்டு
வந்தார். புள்ளி விவரங்களில்      அவர் பெரிய நிபுணர் என்று ஸ்ரீ
வீரசந்திர காந்தி எனக்குச்       சொல்லியிருக்கிறார்.  “காந்தி, நாம்
திரும்பவும் சந்திக்க வேண்டும்” என்றார் ஸ்ரீ வாச்சா.

     இவ்விதம் அறிமுகம் செய்து      வைத்ததெல்லாம் இரண்டே
நிமிஷங்களில் முடிந்து விட்டது.      நான் கூறியதையெல்லாம் ஸர்
பிரோஸ்ஷா         கவனமாகக்   கேட்டுக்கொண்டார். நீதிபதிகள்
ரானடேயையும்        தயாப்ஜியையும்   நான் பார்த்தேன் என்றும்
சொன்னேன். “காந்தி, உமக்கு     நான் உதவி செய்தாக வேண்டும்
என்பதைக் காண்கிறேன். இங்கே நான்   ஒரு பொதுக் கூட்டத்தைக்
கூட்டவேண்டும்”         என்று சொல்லி விட்டுத் தம் காரியதரிசி
ஸ்ரீமுன்ஷியைப் பார்த்து,   கூட்டத்திற்குத் தேதியை நிச்சயிக்கும்படி
கூறினார். தேதியும் முடிவாயிற்று. பொதுக்கூட்டத்திற்கு  முதல் நாள்,
தம்மை வந்து பார்க்கும்படி கூறி, எனக்கு   அவர் விடை கொடுத்து
அனுப்பினார். இந்தச் சந்திப்பு அவரிடம்    எனக்கிருந்த பயத்தைப்
போக்கிவிட்டது. குதூகலத்துடன் வீடு திரும்பினேன்.

     இச்சமயம் பம்பாயில் இருந்தபோது    அங்கே நோயுற்றிருந்த
என் மைத்துனரைப் பார்க்கப் போனேன்.    அவர் வசதியுடையவர்
அல்ல. என் சகோதரி        (அவர் மனைவி) யாலும் அவருக்குப்
பணிவிடை செய்யமுடியவில்லை.   நோயோ கடுமையானது. அவரை
ராஜ்கோட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவதாகக் கூறினேன்.
அவரும்   ஒப்புக் கொண்டார். எனவே என் சகோதரியுடனும் அவர்
கணவரோடும்  நான் வீடு திரும்பினேன். நான் எதிர்பார்த்ததை விட
அவருடைய நோய் அதிக நாள் நீடித்திருந்தது.   என் மைத்துனரை
என் அறையில் தங்கச் செய்து,     இரவும் பகலும் அவருடனேயே
இருந்தேன். இரவில் பாதி நேரம்