Untitled Document      நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்து       கொண்டே என்    தென்னாப்பிரிக்க வேலைகள் சிலவற்றையும் நான்       செய்ய வேண்டியிருந்தது.   முடிவாக நோயாளி    இறந்து விட்டார்.       ஆனால், அவருடைய     கடைசி நாட்களில் அவருக்குப் பணிவிடை       செய்யும்      வாய்ப்புக் கிடைத்தது,   எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
       நோயாளிகளுக்குப்     பணிவிடை செய்வதில் எனக்கு இருந்த விருப்பு, நாளாவட்டத்தில்    அடங்காத அவாவாக வளர்ந்து விட்டது. இதன் பலனாக நான்         என்னுடைய மற்ற வேலைகளைப் பல சமயங்களில்        சரிவரக் கவனிப்பதில்லை. சில சமயம் இவ்விதப் பணிவிடை    செய்வதில்     என் மனைவிக்கும் வேலை கொடுத்து, வீட்டிலிருந்த எல்லோரையும்   அவ் வேலையில் ஈடுபடுத்திவிடுவேன்.
       ஒருவர் இத்தகைய          சேவையைச் செய்வதில் இன்பம் கொண்டாலன்றி   இதைச் செய்வதில்          அர்த்தமே இல்லை. வெளிப்பகட்டுக்காகவோ, பொதுஜன   அபிப்பிராயத்திற்குப் பயந்தோ இதைச் செய்வதாயின், அப்படிச் செய்பவரின்   ஆன்ம வளர்ச்சியை அது குன்றச் செய்து, உணர்ச்சியையும் நசுக்கி விடுகிறது. சந்தோஷம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும்       நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா  இன்பங்களும் உடைமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.
                    என் மைத்துனர் இறந்த அன்றே பொதுக் கூட்டத்திற்காக நான் பம்பாய் போக வேண்டியிருந்தது.   நான் அங்கே செய்ய வேண்டிய பிரசங்கத்தைக் குறித்துச்  சிந்திக்கக்கூட எனக்கு அவகாசம் இல்லை. இரவும்       பகலும் கவலையுடன் விழித்திருக்க நேர்ந்ததால், நான் களைத்துப் போனேன்.        தொண்டையும் கம்மிப் போயிருந்தது. என்றாலும், கடவுளிடமே      முழு நம்பிக்கையையும் வைத்து, நான் பம்பாய்க்குப் போனேன்.   என் பிரசங்கத்தை முன்னாலேயே எழுத வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை.
       ஸர் பிரோஸ்ஷா கூறியிருந்தபடி, பொதுக் கூட்டம்  நடப்பதற்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு, அவர் காரியாலயத்திற்குப் போனேன்.
       “காந்தி, உமது பிரசங்கம் தயாராக இருக்கிறதா?” என்று அவர் என்னைக் கேட்டார்.
       “இல்லை, ஐயா.     ஞாபகத்தில் இருந்தே   கூட்டத்தில் பேசி விடலாம் என்று இருக்கிறேன்” என்று     நான் நடுங்கிக் கொண்டே சொன்னேன். |      |   
				 | 
				 
			 
			 |