பக்கம் எண் :

புனாவும் சென்னையும் 215

Untitled Document
அதிக உறுதி கொள்ளலானேன்.   தாய்நாட்டிற்குச்  செய்ய வேண்டிய
வேலையின் எப்பகுதியையும்   தேசபக்தி உள்ள ஒருவர் அலட்சியம்
செய்துவிட முடியாது.   எனக்கோ         கீதையின் வாசகம் மிகத்
தெளிவாகவும் கண்டிப்பாகவும் இருந்தது: “நன்றாக அனுஷ்டிக்கப்பட்ட
பிறருடைய தருமத்தைவிட,    குணமற்ற தனது தருமமே சிறந்ததாகும்.
தனது தருமத்தை நிறைவேற்றும்      போது இறப்பது சிறந்தது. பிறர்
தருமம் பயத்தைக் கொடுப்பதாகும்“.

28. புனாவும் சென்னையும்

     என் வேலையை ஸர் பிரோஸ்ஷா எளிதாக்கிவிட்டார். ஆகவே,
பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன்.     அங்கே இரு கட்சியினர்
இருந்தார்கள். எல்லாவிதக்  கருத்துக்களும் கொண்ட எல்லோருடைய
உதவியும் எனக்குத் தேவை.      முதலில் லோகமான்யத் திலகரைப்
பார்த்தேன். அவர் கூறியதாவது:

     “எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும்
சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக   அபிப்பிராய பேதமே
இருப்பதற்கில்லை.  ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர்,
உங்கள்      பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும்.
பேராசிரியர்    பந்தர்காரைச் சந்தியுங்கள்.  கொஞ்ச காலமாக அவர்
பொதுஜன      இயக்கம்   எதிலும்     ஈடுபடுவதில்லை. அவரைப்
பார்த்துவிட்டு, அவர் என்ன       சொல்கிறார் என்பதை என்னிடம்
கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய
வேண்டும் என்று விரும்புகிறேன்.    நீங்கள் விரும்பும் போதெல்லாம்
வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம்.   வேண்டியதைச் செய்ய
எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்.”

     லோகமான்யரை நான் சந்தித்தது      இதுவே முதல் தடவை.
பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின்
ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது.

     பின்பு கோகலேயைப் போய்ப் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி
மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை
வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம்       அப்பொழுதே என்
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது.   அவரைச் சந்திப்பதும்
இதுதான் முதல் தடவை. என்றாலும், ஏதோ பழைய நட்பை மீண்டும்
புதுப்பித்துக்     கொள்ளுவதைப்     போலவே      தோன்றியது.
ஸர் பிரோஸ்ஷா எனக்கு           இமயமலைபோல் தோன்றினார்.
லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார்.  ஆனால்,
கோகலேயோ       கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய
நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு
அரியது. கடலில், யாரும்