பக்கம் எண் :

சோதனை233

Untitled Document
மற்றவர்களோ         சிரித்தனர்.    இக்கதையைச் சிலர் நம்பவே
மறுத்துவிட்டனர்.

     சூப்பரிண்டெண்டென்டு   கூறியதாவது:   “நான் சொல்லுவதை
நீங்கள்     நம்பவில்லையென்றால்,  உங்கள் பிரிதிநிதியாக ஒருவரை
அல்லது இருவரை நியமியுங்கள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துப்
போக நான் தயார்.       அவர்கள் காந்தியை அங்கே கண்டுபிடித்து
விட்டால் அவரை உங்களிடம்    ஒப்படைத்து விடுகிறேன். அவர்கள்
கண்டுபிடிக்கவில்லையென்றால் நீங்கள் கலைந்து போய்விட வேண்டும்.
ஸ்ரீ ருஸ்தம்ஜியின்    வீட்டை நாசப்படுத்த வேண்டும் என்பதோ, ஸ்ரீ
காந்திஜியின் மனைவியையும் குழந்தைகளையும் துன்புறுத்த வேண்டும்
என்பதோ உங்கள் நோக்கம் அல்ல என்று நம்புகிறேன்.”

     வீட்டைச்      சோதிக்கக் கூட்டத்தினர் தங்கள் பிரதிநிதிகளை
அனுப்பினார்கள்.        ஏமாற்றச் செய்தியுடன் அவர்கள் சீக்கிரமே
திரும்பிவிட்டனர்.    கடைசியாகக் கூட்டமும் கலைந்தது. அவர்களில்
பெரும்பாலானவர்   சூப்பரிண்டெண்டென்டு         சாமர்த்தியமாக
நிலைமையைச் சமாளித்திருப்பதைப் பாராட்டினர். மற்றும்    சிலரோ,
ஆத்திரத்தினால் குமுறிக் கொண்டே போனார்கள்.

     காலஞ்சென்ற     ஸ்ரீ சேம்பர்லேன்,   அப்பொழுது குடியேற்ற
நாடுகளின் மந்திரியாக இருந்தார். என்னைத் தாக்கியவர்களைக் கைது
செய்து, வழக்குத் தொடருமாறு           நேட்டால் அரசாங்கத்தைக்
கேட்டுக்கொண்டு அவர் தந்தி கொடுத்தார். ஸ்ரீ எஸ்கோம்பு என்னைக்
கூப்பிட்டனுப்பினார். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக     வருத்தம்
தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாவது:    “உங்கள் உடம்புக்கு
மிகச் சொற்ப தீங்கு இழைக்கப்படினும் அதற்காக   நான் வருந்தாமல்
இருக்க முடியாது.    இதை நீங்கள் நம்புங்கள். என்ன வந்தாலும் சரி
என்று ஸ்ரீ லப்டனுடைய        யோசனையை ஏற்கு கொள்ளுவதற்கு
உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால்,    என் யோசனையை நீங்கள்
கொஞ்சம் கவனித்திருப்பீர்களாயின, இந்தத் துக்ககரமான சம்பவங்கள்
நிகழ்ந்தே இரா என்பது நிச்சயம். உங்களைக் கைது செய்து, வழக்குத்
தொடர       நான் தயாராக இருக்கிறேன்.   நான் அவ்வாறு செய்ய
வேண்டும் என்றே ஸ்ரீ சேம்பர்லேனும் விரும்புகிறார்.”

     அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்:    “யார் மீதும்
குற்றஞ்சாட்டி,   வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. அவர்களில்
இரண்டொருவரை  நான்  அடையாளம் கண்டுபிடிப்பதும் சாத்தியமாக
இருக்கலாம். ஆனால், அவர்கள் தண்டனை அடையும்படி செய்வதால்
என்ன பயன்? மேலும் அடித்தவர்களே குற்றஞ்  செய்தவர்கள் என்று
நான் கருதவில்லை. நேட்டால்