பக்கம் எண் :

234சத்திய சோதனை

Untitled Document
வெள்ளையரைக் குறித்து,     இந்தியாவில் இல்லாதது பொல்லாததை
எல்லாம் நான் கூறி, அவர்களை       அவமானப்படுத்தி விட்டதாக
அவர்கள்    எண்ணும்படி     செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு
கூறப்பட்டதை அவர்கள் நம்பினார்கள் என்றால், அவர்கள் ஆத்திரம்
அடைந்ததில் ஆச்சரியம்        எதுவும்  இல்லை. தலைவர்களைப்
பற்றியும் நான் இப்படிக்கூறுவதை நீங்கள்  அனுமதிப்பதாக இருந்தால்,
உங்களையும்தான்       இதற்கெல்லாம்  குற்றஞ் சொல்ல வேண்டும்.
மக்களைச் சரியான வழியில்     நீங்கள் நடத்திச்  சென்றிருக்கலாம்.
ஆனால்,       ராய்ட்டரின்  செய்தியை நீங்களும் நம்பிவிட்டீர்கள்.
இல்லாததையெல்லாம்        நான் கூறியிருப்பேன் என்று நீங்களும்
எண்ணிக்கொண்டீர்கள்.   யார்மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர
நான் விரும்பவில்லை. உண்மை தெரிந்ததும்,       தாங்கள் நடந்து
கொண்டு விட்டதற்கு அவர்களே வருந்துவார்கள்    என்பதை நான்
நிச்சயமாக அறிவேன்.”

     “நீங்கள்      கூறியதைத்      தயவு செய்து எழுத்து மூலம்
கொடுக்கிறீர்களா?” என்று ஸ்ரீ எஸ்கோம்பு கேட்டார். அவர் மேலும்
கூறியதாவது: “ ஏனெனில், அப்படியே நான்  ஸ்ரீ சேம்பர்லேனுக்குத்
தந்தி மூலம் அறிவித்துவிட வேண்டியிருக்கிறது. அவசரத்தில் நீங்கள்
எதையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
திட்டமான          ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், நீங்கள்
விரும்பினால்,      ஸ்ரீ லாப்டனையும் மற்ற நண்பர்களையும் கலந்து
ஆலோசித்துக்               கொள்ளுங்கள். ஆனால், என்னைப்
பொறுத்தவரையில் ஒன்றை மாத்திரம்    உங்களிடம் ஒப்புக்கொண்டு
விடுகிறேன். உங்களைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ்சாட்டி, வழக்குத்
தொடரும்   உரிமையை நீங்கள் விட்டுக் கொடுத்து விடுவீர்களாயின்,
அமைதியை       நிலைநாட்டுவதற்கு அதிக அளவு எனக்கு உதவி
செய்தவர்கள் ஆவீர்கள். அதோடு உங்கள்        பெருமையையும்
உயர்த்திக்கொண்டவர்கள் ஆவீர்கள்”.

     “உங்களுக்கு நன்றி.     நான் யாரையும் கலந்து ஆலோசிக்க
வேண்டியதில்லை.      உங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இது
சம்பந்தமாக நான் ஒரு முடிவுக்கு       வந்துவிட்டேன். என்னைத்
தாக்கியவர்கள்மீது குற்றஞ் சாட்டி,       வழக்குத் தொடரக்கூடாது
என்பது என் கொள்கை.   என் தீர்மானத்தை இப்பொழுதே எழுத்து
மூலம்        கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.” இப்படிக் கூறி
அவசியமான அறிக்கையை எழுதிக் கொடுத்தேன்.

4. புயலுக்குப் பின் அமைதி

     இன்னும்  போலீஸ் ஸ்டேஷனை விட்டு,     நான் வீட்டுக்குப்
போகவில்லை.        இரண்டுநாள் கழித்துப் போலீஸ் ஸ்டேஷனில்
இருந்தபடியே என்னை ஸ்ரீ எஸ்கோம்பிடம்  அழைத்துச் சென்றனர்.