பக்கம் எண் :

புயலுக்குப் பின் அமைதி237

Untitled Document
நிதியைக்கொண்டு சொத்துக்களை வாங்கி,   அச் சொத்துக்களிலிருந்து
கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்துவருமாறு செய்ய
வேண்டும் என்று          விரும்பினேன். ஒரு பொது ஸ்தாபனத்தை
நிர்வகிப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். என் யோசனையை என்
சக ஊழியர்களிடம் அறிவித்தேன். அவர்களும், இதை   ஆதரித்தனர்.
வாங்கிய சொத்து,        வாடகைக்கு விடப்பட்டது. கிடைத்த வட்டி,
காங்கிரஸின்     நடைமுறைச் செலவுக்குப் போதுமானதாக இருந்தது.
சொத்தை      நிர்வகிப்பதற்குச் செல்வாக்குள்ள வர்களைக் கொண்ட
தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம்.    இன்றும்கூட அது இருந்து
வருகிறது. ஆனால், அது இடைவிடாத  சச்சரவுக்கு இடமாகி விட்டது.
இதன் காரணமாக         இப்பொழுது   அச் சொத்தின் வாடகைப்
பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

     இந்தத் துக்ககரமான நிலைமை நான்     தென்னாப்பிரிக்காவில்
இருந்து வந்த பிறகு உண்டாயிற்று.         ஆனால், இந்தத் தகராறு
ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு   முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு
நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று   எனக்கு இருந்த கருத்து
மாறிவிட்டது. இப்பொழுதோ,       பல பொது ஸ்தாபனங்களை நான்
நிர்வகித்திருப்பதால் எனக்கு     அதிக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது
நிரந்தரமான நிதியின் மூலம்      பொது ஸ்தாபனங்களை நடத்துவது
நல்லது அல்ல’ என்பதே இப்பொழுது என்னுடைய திடமான கருத்தாகி
விட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த
ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும்       அந்நிதியுடன்
ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய  அங்கீகாரத்தின் பேரில்,
அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம்.
அத்தகைய  ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால்,
பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான
நிதியைக் கொண்டு நடத்தப்படும்   பொது ஸ்தாபனங்கள், பொதுஜன
அபிப்பிராயத்திற்கு           மாறுபட்ட காரியங்களையும் அடிக்கடி
செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம்      ஒவ்வொரு கட்டத்திலும்
அனுபவித்துக்       கொண்டு வருகிறோம்.  மத சம்பந்தமான தரும
ஸ்தாபனங்கள் என்று கூறப்படும்      சில ஸ்தாபனங்கள், கணக்குக்
காட்டுவது     என்பதையே விட்டு விட்டன.    தருமகர்த்தாக்களே,
அச் சொத்துக்களுக்குச்     சொந்தக்காரர்கள்    ஆகிவிட்டார்கள்.
அவர்கள், யாருக்கும் பொறுப்பாளிகள் அல்ல. ‘இயற்கையைப் போல,
அன்றைக்குத்    தேவையானதைப் பெற்று       வாழ்வதே பொது
ஸ்தாபனங்களுக்கு உகந்தது’ என்பதில்,     எனக்கு எந்த விதமான
சந்தேகமும் இல்லை.        பொதுஜன ஆதரவைப் பெற முடியாத
ஸ்தாபனத்திற்கு  பொதுஜன ஸ்தாபனமாக இருந்து வரும் உரிமையே
இல்லை. வருடந்தோறும்         ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும்
சந்தாத்தொகை, அதன்