பக்கம் எண் :

குழந்தைகளின் படிப்பு 241

Untitled Document
அது, நான் அனுபவம் இன்மையிலும், இன்ப நுகர்ச்சியிலும் திளைத்த
காலம் என்று கருத இயற்கையாகவே      அவன் மறுத்து விட்டான்.
இதற்கு நேர்மாறாக அதுவே என்னுடைய  வாழ்க்கையின் மிக சிறந்த
காலம் என்றும்,           பின்னால் எனக்கு ஏற்பட்ட மாறுதல்கள்,
அறிவுத்தெளிவு என்று      தவறாகக் கூறப்படும் மதிமயக்கத்தினால்
ஏற்பட்டவை என்றும் அவன் கருதிவிட்டான்.     அவன் அப்படியே
எண்ணியிருக்கட்டும்.      என் வாழ்க்கையின் ஆரம்ப காலம், நான்
புத்தித்தெளிவு       பெற்றிருந்த காலம் என்றும் பெரிய மாறுதல்கள்
ஏற்பட்ட பிந்திய காலமே மாயையும்,    அகந்தையும் நிறைந்த காலம்
என்றும், அவன் ஏன் எண்ணக் கூடாது?      அடிக்கடி நண்பர்கள்
என்னைக் கீழ்வரும்           பல கேள்விகளைக் கேட்டு மடக்கப்
பார்த்திருக்கின்றனர். உங்கள் குழந்தைகளுக்குக்  கலாசாலைப் படிப்பு
அளித்திருந்தால் அதனால் என்ன தீமை விளைந்திருக்கும்? ‘இவ்விதம்
அவர்களுடைய சிறகுகளைத்      துண்டித்துவிடுவதற்கு உங்களுக்கு
என்ன உரிமை இருக்கிறது?’    ‘படித்துப் பட்டம் பெற்று, தங்களுக்கு
விருப்பமான வாழ்க்கைத் துறைகளை அவர்கள் மேற் கொள்ளுவதற்கு
நீங்கள் ஏன் குறுக்கே நின்றிருக்க வேண்டும்?’

     இந்த விதமான கேள்விகளில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக
எனக்குத் தோன்றவில்லை.     எத்தனையோ மாணவர்களுடன் நான்
பழகியிருக்கிறேன். கல்வியைக்   குறித்து எனக்குள்ள கொள்கைகளை
நானாகவோ,       மற்றவர்களின் மூலமோ வேறு குழந்தைகளிடமும்
அனுசரித்து,           அதன் பலனையும் கவனித்திருக்கிறேன். என்
புத்திரர்களின்     வயதினரான மற்றும் பல இளைஞர்களை எனக்குத்
தெரியும்.     மனிதனுக்கு மனிதன்      ஒப்பிட்டுப் பார்த்தால், என்
புதல்வர்களைவிட அவர்கள்       எந்த விதத்திலும் மேலானவர்கள்
என்றோ,     அவர்களிடமிருந்து   என் புதல்வர்கள் கற்றுக்கொள்ள
வேண்டிய எதுவும் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை.

     ஆனால் என்னுடைய       சோதனைகளின் முடிவான பலன்,
காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் இங்கே
விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம்       ஒன்று உண்டு. நாகரிக
வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர், கட்டுப்பாட்டோடு கூடிய
வீட்டுப்    படிப்பிற்கும்,     பள்ளிக்கூடப்     படிப்பிற்கும் உள்ள
வித்தியாசத்தையும், பெற்றோர்கள்      தங்களுடைய வாழ்க்கையில்
செய்யும் மாறுதல்களுக்கு       ஏற்ற வகையில் குழந்தைகளிடையே
ஏற்படும் மாறுதல்களையும்         ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும்
அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு  காரணமும்
உண்டு: சத்தியத்தை நாடும் ஒருவர்,     சத்தியத்தைக்கொண்டு, தாம்
செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது
என்பதையும் சுதந்திரத்தை      நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான
சுதந்திர தேவி, என்ன என்ன      தியாகங்களை எதிர் பார்க்கிறாள்