பக்கம் எண் :

257

Untitled Document
கொள்ளவாவது           கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான்
அறிந்தவரையில்,    தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக்
கொள்ளுவது என்பதை யாரும்       கற்றுக் கொண்டதில்லை. நான்
இதையும் கற்றுக்கொண்டுவிட வேண்டியதாயிற்று.   நான் ஒரு சமயம்
பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர்         ஒருவரிடம் முடி வெட்டிக்
கொள்ளப் போனேன். அவர்,        அதிக வெறுப்புடன் என் தலை
முடிவை வெட்ட மறுத்துவிட்டார்.    எனக்கு இது அவமரியாதையாக
இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை       வாங்கினேன்.
கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என்    தலை முடியை கத்தரித்துக்
கொண்டேன் முன் முடியை      வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு
வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து
விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள்   அதைப் பார்த்துவிட்டுக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.

     “உமது தலை முடிக்கு       என்ன ஆபத்து வந்தது, காந்தி?
எலிகள்   ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று  கேட்டனர்.

     “அப்படியெல்லாம் ஒன்று இல்லை. வெள்ளைக்காரரான க்ஷவரத்
தொழிலாளி என் கறுப்பு முடியை தொட இஷ்டப்படவில்லை. ஆகவே,
எவ்வளவு          மோசமாக இருந்தாலும் சரி, என் முடியை நானே
வெட்டிக்கொள்ளுவது என்று வெட்டிக்கொண்டு விட்டேன்” என்றேன்.

     என் பதில் அந்த             நண்பர்களுக்கு ஆச்சரியத்தை
உண்டாக்கவில்லை. தலைமுடியை வெட்ட மறுத்தது    அந்த க்ஷவரத்
தொழிலாளியின் குற்றமல்ல. கருப்பு மனிதருக்கு   அவர் முடி வெட்டி
விடுவாரானால் வெள்ளைக்காரர்கள் அவரிடம் முடி வெட்டிக்கொள்ள
வர மறுத்துவிடக் கூடும். நமது தீண்டாத   சகோதரர்களுக்கு க்ஷவரம்
செய்ய, நம்     க்ஷவரத் தொழிலாளியை நாம் அனுமதிப்பதில்லையே!
இந்தப் பாவத்திற்கு உரிய பலனை நான்   தென்னாப்பிரிக்காவில் ஒரு
தடவை அல்ல, பல தடவைகளில்  அனுபவித்தேன். ‘இதெல்லாம் நாம்
செய்த பாவத்திற்குத் தண்டனையே’ என்ற       நம்பிக்கை எனக்கு
இருந்ததால் நான் கோபம் அடையவில்லை.

     எனக்கு       வேண்டியவைகளையெல்லாம்   நானே செய்து
கொள்ளுவது என்பதிலும்,   எளிய வாழ்க்கையிலும், எனக்கு இருந்த
ஆர்வம் எவ்வளவு தீவிரமான முறைகளில்       வெளியிடப்பட்டது
என்பதைப் பற்றிய விவரங்களை      அதற்குரிய இடம் வரும்போது
கூறுகிறேன். விதை, நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டு விட்டது.
வேர் இறங்கி,       அது பூத்துக் காய்க்க, அதற்குத் தண்ணீர் ஊற்ற
வேண்டியதே பாக்கியாக இருந்தது. அதற்குத்  தண்ணீர் பாய்ச்சுவதும்
உரிய காலத்தில் நடந்தது.