பக்கம் எண் :

258சத்திய சோதனை

Untitled Document
10 போயர் யுத்தம்

     1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம்    ஆண்டுக்கும் இடையே
ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம்    விட்டுவிட்டு நேரே
போயர் யுத்தத்திற்கு வரவேண்டும்.

     அந்தப் போர்       ஆரம்பம் ஆனபோது    என் சொந்தக்
கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை   என்றே நான்
நம்பினேன். இது சம்பந்தமாக        என் உள்ளத்தில் அப்பொழுது
ஏற்பட்ட       போராட்டத்தைக் குறித்து,     நான் எழுதியிருக்கும்
‘தென்னாப்பிரிக்கச்    சத்தியாக்கிரக சரித்திர’த்தில்     விவரமாகக்
கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை   இங்கே திரும்பவும் சொல்லிக்
கொண்டிருக்க வேண்டியதில்லை.       அதை அறிய விரும்புவோர்
அப் புத்தகத்தில் பார்த்துக்         கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ்
ஆட்சியிடம் நான் சொண்டிருந்த விசுவாசம், அப்போரில்  பிரிட்டிஷ்
பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச்  சொல்லுவது
மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை    என்ற வகையில்
நான் உரிமைகளைக் கோரினால்,     அந்த பிரஜை என்ற வகையில்,
பிரிட்டிஷ்   சாம்ராஜ்யத்தின்      பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட
வேண்டியதும்     என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த       ஏகாதிபத்தியத்துக்கு
உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை      இந்தியா அடைய
முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால்,  என்னால்
முடிந்த வரையில்        தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக்
கொண்டு வைத்திய       உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு,
அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்ளும்    படியும்
செய்தேன்.

     ‘இந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன்,உடனடியான
தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான்’
என்பதே பொதுவாக  ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால்,
நான் என் யோசனையைக் கூறியதும்,      பல ஆங்கில நண்பர்கள்
என்னை அதைரியப்படுத்தினர்.         ஆனால், டாக்டர் பூத், என்
திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு,
அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.      சேவைக்குத் தகுதி
வாய்ந்தவர்கள்          என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம்
எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும்,  காலஞ்சென்ற
ஸ்ரீ எஸ்கோம்பும்       இத்திட்டத்திற்கு           உற்சாகத்துடன்
ஆதரவளித்தார்கள்.          கடைசியாகப் போர்முனையில் சேவை
செய்வதாகமனுச் செய்து கொண்டோம். அரசாங்கம்,   வந்தனத்துடன்
எங்கள் மனுவை        ஏற்றுக்கொண்டது. ஆனால், எங்கள் சேவை
அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.

     இந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா