பக்கம் எண் :

இந்தியாவுக்குத் திரும்ப முடிவு 263

Untitled Document
தங்கள் பங்கைக் கொடுத்து உதவினர். இந்தப் பஞ்சங்கள் தோன்றிய
சமயத்தில் ஏற்பட்ட இந்த உதவி முறை,        அப்பொழுதிலிருந்து
தொடர்ந்து         நடந்துகொண்டு வருகிறது. இந்தியாவில் பெரிய
துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் பெருந்தொகையை இந்தியாவுக்கு
அனுப்பி உதவுவதற்குத் தென்னாப்பிரிக்க       இந்தியர் தவறுவதே
இல்லை.

     இவ்விதம், தென்னாப்பிரிக்க    இந்தியரிடையே நான் செய்து
வந்த சேவை,        ஒவ்வொரு கட்டத்திலும்,  சத்தியத்தின் புதிய
தன்மைகளை             எப்பொழுதும் எனக்குக் காட்டி வந்தது.
சத்தியம் என்பது ஒரு      பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர்
ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது      மேலும் மேலும் கனிகளை
அதிகமாகக்         கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சத்தியத்தின்
சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய்,    நாம் தேடத் தேட அதில்
பொதிந்து கிடக்கும்,      மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள
ரத்தினங்களைக் காண்கிறோம்.பல வகைகளிலும் சேவை செய்வதற்கு
ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.

12 இந்தியாவுக்குத் திரும்ப முடிவு

     யுத்த சேவையிலிருந்து நான் விடுவிக்கப்பட்டதும்,  ‘இனி நான்
செய்ய    வேண்டிய வேலை,    இந்தியாவில்தானே       அன்றி
தென்னாப்பிரிக்காவில் அல்ல’ என்பதை  உணர்ந்தேன். இப்படி நான்
எண்ணியதற்குக் காரணம், தென் ஆப்பிரிக்காவில் இனி  செய்வதற்கு
எதுவுமே இல்லை என்பது அல்ல.          ஆனால், அங்கே என்
முக்கியமான வேலை,   பணம் சம்பாதிப்பதாகவே ஆகிவிடும் என்று
அஞ்சினேன்.

     தாய் நாட்டில் இருந்த நண்பர்களும்,   திரும்பி வந்துவிடுமாறு
என்னை வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள்.        இந்தியாவில் நான்
அதிகமாகச்        சேவை செய்ய முடியும் என்றும் எண்ணினேன்.
தென்னாப்பிரிக்காவிலிருக்கும்      வேலைகளுக்கோ, ஸ்ரீகானும், ஸ்ரீ
மன்சுக்லால் நாஸரும்       இருக்கிறார்கள்.   ஆகையால், என்னை
விடுவிக்குமாறு எனது சக ஊழியர்களைக் கேட்டுக்கொண்டேன். என்
கோரிக்கை    அதிகச் சிரமத்தின் பேரிலும்,    ஒரு நிபந்தனையின்
பேரிலும்            ஒப்புக்கொள்ளப்பட்டது.    ஓர் ஆண்டிற்குள்
தென்னாப்பிரிக்க        இந்தியர்   சமூகம் என்னை விரும்பினால்,
தென்னாப்பிரிக்காவுக்குத்     திரும்பிவிட    நான் தயாராக இருக்க
வேண்டும் என்பதே அந்த   நிபந்தனை. இது கஷ்டமான நிபந்தனை
என்று கருதினேன். ஆயினும்,           சமூகத்தினுடன் என்னைப்
பிணைத்திருந்த        அன்பின் காரணமாக   அந்த நிபந்தனைக்கு
ஒப்புக்கொண்டேன். ‘அன்பெனும்         நூலிழையினால் கண்ணன்
என்னைக் கட்டிவிட்டான். நானும் அவனுக்கு முழு