பக்கம் எண் :

268சத்திய சோதனை

Untitled Document
கவர்னர் ஸர் சார்லஸ் புரூஸின்         விருந்தினனாக இருந்தேன்.

     இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் நாட்டைச் சுற்றிப்  பார்ப்பதில்
கொஞ்ச காலத்தைக் கழித்தேன். அது 1901-ஆம் ஆண்டு. அப்போது
கல்கத்தாவில் ஸ்ரீ     (பிறகு ஸர்) தின்ஷா வாச்சாவின் தலைமையில்
காங்கிரஸ் மகாநாடு நடந்தது. நானும் மகாநாட்டிற்குப் போயிருந்தேன்.
காங்கிரஸைப்பற்றிய என் முதல் அனுபவம் அதுதான்.

     தென்னாப்பிரிக்க     நிலையைக் குறித்து,   ஸர் பிரோஸ்ஷா
மேத்தாவுடன் நான் பேசவேண்டியிருந்ததால், பம்பாயிலிருந்து அவர்
பிரயாணம் செய்த அதே    ரெயிலில் நானும் பிரயாணம் செய்தேன்.
அவர் எவ்விதமான       ராஜபோக வாழ்க்கையை நடத்தி வந்தார்
என்பதை நான் அறிவேன். தமக்கு என்று அவர், எல்லா வசதிகளும்
உள்ள தனிப்பெட்டி ஒன்றை ரெயிலில் அமர்த்திக்  கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட         இரு ஸ்டேஷன்களுக்கு இடையில் அவருடைய
தனிப்பெட்டியில்        நான்  பிராயணம் செய்து,  நான் சொல்ல
வேண்டியதைச்      சொல்லிக்கொள்ளலாம்      என்பது எனக்கு
இடப்பட்டிருந்த கட்டளை. ஆகவே,      குறிப்பிட்ட ஸ்டேஷனில்
அவருடைய        தனிப்பெட்டிக்குப் போய், நான் வந்திருப்பதை
அவருக்குத் தெரிவித்துக்கொண்டேன். அவருடன் ஸ்ரீ வச்சாவும் ஸ்ரீ
(இப்பொழுது ஸர்)     சிமன்லால் சேதல்வாடும் இருந்தனர். ராஜீய
விஷயங்களைக்             குறித்து,   அவர்கள்   விவாதித்துக்
கொண்டிருந்தார்கள்.       ஸர் பிரோஸ்ஷா என்னைப் பார்த்ததும்
பின்வருமாறு கூறினார்:  “காந்தி, உமக்கு எதுவும் என்னால் செய்ய
முடியாது போல்        தோன்றுகிறது. ஆனால்,    நீர் விரும்பும்
தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். நம் சொந்த நாட்டிலேயே
நமக்கு என்ன உரிமை இருக்கிறது?          நம் நாட்டில் நமக்கு
எந்தவிதமான அதிகாரமும் இல்லாதிருக்கும் வரையில், காலனிகளில்
நீங்கள் சுகமடைய முடியாது என்றே நான் நம்புகிறேன்.”

     இதைக் கேட்டு நான் திடுக்கிட்டுப்போனேன்.  அக் கருத்தை
ஸ்ரீ சேதல்வாடும்      அங்கீகரிப்பதாகத் தோன்றியது. ஸ்ரீ வாச்சா,
என்னைப் பரிதாப       நோக்குடன் பார்த்தார். பிரோஸ்ஷாவிடம்
என்னுடைய கட்சியை        எடுத்துக்கூற முயன்றேன். ஆனால்,
பம்பாயின் முடிசூடா மன்னரான அவரை,       என்னைப்போன்ற
ஒருவன், தனது           கட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து
விடுவதென்பதற்கு இடமே இல்லை.    என்னுடைய தீர்மானத்தைக்
கொண்டுவர அனுமதிக்கப்படுவேன்         என்பதைக் கொண்டு
திருப்தியடைந்தேன்.

     “தீர்மானத்தை     முன்னதாகவே காட்டுவீர்கள் அல்லவா?”
என்று என்னை    உற்சாகப்படுத்துவதற்காக ஸ்ரீ வாச்சா கேட்டார்.
அவருக்கு நன்றி தெரிவித்தேன்.     ரெயில் அடுத்த ஸ்டேஷனில்