பக்கம் எண் :

திரும்பவும் இந்தியாவில் 267

Untitled Document
     “உங்கள் சேவைக்காகவே என்பதை  ஒப்புக் கொள்ளுகிறேன்.
ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா?
உங்களுக்காக இரவு பகல்     நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன்.
அதெல்லாம்     சேவையல்லவா?                போகிறவர்கள்
வருகிறவர்களையெல்லாம்             வீட்டுக்கு அழைத்து வந்து,
அவர்களுக்கெல்லாம்         உழைத்து,   நான் கண்ணீர் வடிக்கச்
செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம்     அடிமையாக உழைத்தேனே!”
என்றாள், என் மனைவி.

     இச் சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில
ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத்       திருப்பிக் கொடுத்து
விடுவது என்று நான் உறுதி    கொண்டுவிட்டேன். இதற்கு அவளும்
முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில்       எப்படியோ வெற்றி
பெற்றேன். 1896, 1901-ஆம்          ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட
அன்பளிப்புகள் யாவும்      திருப்பிக்கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு
தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளையெல்லாம்
ஒரு        பாங்கில்       ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ,
தருமகர்த்தாக்களின் விருப்பப்படியோ,     இந் நிதியைச் சமூகத்தின்
சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.

     பொதுஜன   காரியங்களுக்கு நிதி    எனக்குத் தேவைப்பட்டு,
‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’  என்று
நான்   எண்ணிய போதெல்லாம்,   தேவைக்கு வேண்டிய பணத்தை
வெளியிலேயே வசூல் செய்துகொள்ள    என்னால் முடிந்திருக்கிறது.
ஆகையால், அந்த நிதி அப்படியே   செலவாகாமல் இருந்தது. அந்த
நிதி இன்னும்    இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு
வருகிறார்கள். ஒழுங்காக அந் நிதி    சேர்ந்து கொண்டும் வருகிறது.

     இவ்வாறு       இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும்
வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும்,     அப்படிச் செய்தது
தான் புத்திசாலித்தனமானது என்பதை     என் மனைவியும் அறிந்து
கொண்டாள். எத்தனையோ      ஆசைகளிலிருந்து அது எங்களைப்
பாதுகாத்தது.

     பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்,   விலை உயர்ந்த
வெகுமதிகளை     ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய
திடமான அபிப்பிராயம்.

13 திரும்பவும் இந்தியாவில்

     ஆகவே, நான் தாய்நாட்டிற்குப்     பயணமானேன். மத்தியில்
கப்பல் நின்ற துறைமுகங்களில் மொரீஷியஸ் (மோரிஸ்) தீவும் ஒன்று.
அங்கே கப்பல் கொஞ்சம் அதிகமாகத் தாமதித்ததால் நான் கரையில்
இறங்கி,       இத்தீவிலிருந்த   நிலைமையை        ஓரளவுக்குத்
தெரிந்துகொண்டேன். ஒரு நாள் இரவு, அந்தக் காலனியின்