பக்கம் எண் :

266சத்திய சோதனை

Untitled Document
தேவையில்லை’ என்று        நாங்கள் கூறும்போது, அவைகளைக்
கொடுத்துவிட அம்மா         ஏன் சம்மதிக்க மாட்டார்”? என்றும்
கூறினார்கள்.

     பேச்சளவில் இது         எளிதாகத்தான் இருந்தது. ஆனால்,
காரியத்திலோ அது அதிகக்     கஷ்டமாக இருந்தது. என் மனைவி
கூறியதாவது:      “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப்படாமல்
இருக்கலாம்.   உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று
இருக்கலாம். அவர்களை      நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள்
இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள்.   நகைகளை நான்
போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து
கொள்ளுகிறேன். ஆனால்,      என் மருமகப்பெண்கள் வரும்போது
அவர்கள் விஷயம் என்ன? நிச்சயம்        அவர்களுக்கு நகைகள்
வேண்டியிருக்கும். நாளைக்கு       நம் நிலைமை எப்படி இருக்கும்
என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த
வெகுமதிகளைத்        திருப்பிக் கொடுத்துவிட நான் ஒரு போதும்
சம்மதிக்கவே மாட்டேன்.”

     இவ்வாறு அவள், வாதங்களைச் சண்டமாருதமாகப் பொழிந்தாள்.
முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப்  பலப்படுத்தினாள். ஆனால்,
குழந்தைகளோ உறுதியுடன்    இருந்தார்கள். நானும் அசையவில்லை.
நான் சாந்தமாகப்       பின்வருமாறு கூறினேன்:  “குழந்தைகளுக்கு
இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக
இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை.
அவர்கள் வளர்ந்ததும்,       அவர்கள்  காரியங்களை அவர்களே
முடித்துக்கொள்ளுவார்கள்.     மேலும்,     நகைப் பித்துப் பிடித்த
பெண்களை நம்      குமாரர்களுக்கு  நாம் மணம் செய்துவைக்கப்
போவதில்லை என்பதும் நிச்சயம்.       அவர்களுக்கு நகை போட
வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை    வாங்கிக் கொடுக்க
நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”

     அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா?      இவ்வளவு நாள்
பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா?        என் நகைகளைப்
பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான்        போட்டுக்கொண்டு
நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட
நீங்கள்    மருமக்கள்மார்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப்
போகிறீர்களாக்கும்!     முடியாது.   நகைகளை     நான் திருப்பிக்
கொடுக்கப்போவதில்லை. மேலும்,   என்னுடைய கழுத்துச் சரத்தைக்
கேட்க,         உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.

     “ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக்   கொடுத்தது
என் சேவைக்காகவோ,      உன் சேவைக்காகவா?”   என்று நான்
கேட்டேன்.