பக்கம் எண் :

இந்தியாவுக்குத் திரும்ப முடிவு 265

Untitled Document
கஷ்டமாக இருந்தது.  அவைகளை வைத்துக்கொள்ளுவதோ இன்னும்
அதிகக்                கஷ்டமாக இருந்தது.   அவைகளை நான்
வைத்துக்கொள்கிறேன் என்றாலும்      என் குழந்தைகளின் சங்கதி
என்ன? என் மனைவியின் விஷயம் என்ன?   சேவைக்கு வேண்டிய
வாழ்க்கை நடத்த அவர்கள்     பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை
ஒன்றே     அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி
வந்திருக்கிறேன்.

     வீட்டில் என்னிடம் விலை     உயர்ந்த நகை எதுவும் இல்லை.
எங்கள் வாழ்க்கையையே விரைவாக      எளிமை ஆக்கிக்கொண்டு
வந்திருக்கிறோம். அப்படியிருக்கத்    தங்கக் கடிகாரங்களை நாங்கள்
எவ்வாறு வைத்துக்கொள்ள முடியும்?  தங்கச் சங்கிலிகளையும் வைர
மோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு     அணிந்துகொள்ள முடியும்?
மக்கள், நகைகளின் மீது இருக்கும்  ஆசையை விட்டுவிட வேண்டும்
என்று பல தடவை நான்           மக்களுக்கு உபதேசம் செய்தும்
இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம்     வந்திருக்கும் நகைகளை
நான் என்ன செய்வது?

     இந்த வெகுமதிகளையெல்லாம்       நான் வைத்துக்கொள்ளக்
கூடாது  என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம் சமூகத்திற்கே
சொந்தமானதாக்கி, இதற்குச் சில தரும  கர்த்தாக்களை நியமித்து, ஒரு
கடிதம் எழுதினேன்.      பார்ஸி ருஸ்தம்ஜியையும் மற்றும் சிலரையும்
தருமகர்த்தாக்களாக நியமித்தேன். காலையில் என்    மனைவியுடனும்
குழந்தைகளோடும் ஆலோசனையை நடத்தி    இப் பெரும் பாரத்தை
நிவர்த்தி செய்துகொண்டேன்.

     இதற்கு என் மனைவியைச்   சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம்
சிரமம் இருக்கும் என்பதை அறிவேன்.    குழந்தைகளைப் பொறுத்த
வரையில் எந்தவிதமான       கஷ்டமும் இராது என்பதும் எனக்குத்
தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக்கொண்டு
விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

     என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே  ஏற்றுக் கொண்டு
விட்டனர்.    “இந்த விலையுயர்ந்த          வெகுமதிகள் நமக்குத்
தேவையில்லை. ஆகையால்,     அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக்
கொடுத்து   விடவேண்டியதே.   அவை நமக்கு    எப்பொழுதாவது
தேவைப்பட்டால் நாம்        அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக்
கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.

     நான் ஆனந்தம் அடைந்தேன்.      “அப்படியானால், உங்கள்
தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி,       அவளும் இதற்குச்
சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச்
செய்வோம்.          அது எங்கள் வேலை.  அம்மாவுக்கு நகைகள்
வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும்
என்றே அவர் விரும்புவார். ‘எங்களுக்கு அவை