பக்கம் எண் :

270சத்திய சோதனை

Untitled Document
ஒரு முறை        மூன்று நாட்கள்  கூடிவிட்டுப் பிறகு தூங்கிவிடும்.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்         மூன்று நாள் திருவிழாவில்
ஒருவருக்கு என்ன அனுபவம் ஏற்பட முடியும்?     தொண்டர்களைப்
போன்றே பிரதிநிதிகளும் இருந்தார்கள். இவர்களைவிட அவர்களுக்கு
மேலான நீண்ட பயிற்சி எதுவும் இல்லை.      அவர்கள் தாங்களாக
எதுவுமே செய்ய      மாட்டார்கள். அதனால், “தொண்டரே! இதைச்
செய்யும்”, “தொண்டரே! அதைச் செய்யும்”        என்று அவர்கள்
இடைவிடாமல் கட்டளையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

     இங்கும்கூட ஓரளவுக்கு நான்        தீண்டாமையை நேருக்கு
நேராகக் கண்டேன். தமிழர்களின்     சமையல்கூடம் மற்றவர்களின்
சமையல் கூடத்திற்கு தொலைவில் தனியாக      இருந்தது. தாங்கள்
சாப்பிடுவதைப் பிறர்       பார்த்துவிட்டால் கூடத் தோஷம் என்று,
தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். எனவே,   அவர்களுக்கு என்று
தனியான         சமையல் கூடத்தைக்     கல்லூரி மைதானத்தில்
அமைத்திருந்தார்கள். நாற்புறமும் தட்டி வைத்து,      இந்தக் கூடம்
கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரே புகை; யாரையும்   மூச்சுத் திணறச்
செய்துவிடும். சமைப்பது, சாப்பிடுவது,      கையலம்புவது எல்லாம்
அதற்குள்ளேதான். திறப்பே       இல்லாத இரும்புப்  பெட்டிபோல்
இருந்தது, அந்த இடம்.     இது வருண தருமத்தின் சீர் கேடாகவே
எனக்கு தோன்றிற்று. காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குள்ளே இத்தகைய
தீண்டாமை இருந்து வருகிறதென்றால்,      இவர்கள்    யாருக்குப்
பிரதிநிதிகள் என்று வந்திருக்கிறார்களோ         அந்த மக்களிடம்
தீண்டாமை இன்னும் எவ்வளவு        மோசமாக இருந்து வருகிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்  என்று எனக்குள்ளேயே சொல்லிக்
கொண்டேன். இதை எண்ணியதும் பெருமூச்சு விட்டேன்.

     அங்கே இருந்த சுகாதாரக் கேட்டிற்கோ   எல்லையே இல்லை.
எங்கும் தண்ணீர், குட்டை குட்டையாகத்    தேங்கிக் கிடந்தது. சில
கக்கூசுகளே இருந்தன.         அங்கிருந்த நாற்றத்தை இப்பொழுது
நினைத்தாலும் எனக்கு       வெறுப்பாக இருக்கிறது. இதைப்பற்றித்
தொண்டர்களிடம்   சொன்னேன்.    “அது எங்கள் வேலை அல்ல,
தோட்டிகளின்    வேலை” என்று அவர்கள் திட்டவட்டமாகப் பதில்
சொல்லிவிட்டார்கள்.         விளக்குமாறு ஒன்று வேண்டும் என்று
கேட்டேன். உடனே, அந்த மனிதர் ஆச்சரியத்தோடு      என்னை
விழித்துப் பார்த்தார்.       ஒரு விளக்குமாற்றைத் தேடிப் பிடித்துக்
கக்கூசைச் சுத்தம் செய்தேன். ஆனால்,  எனக்காகவே நான் சுத்தம்
செய்து கொண்டேன். கூட்டமோ மிகவும் அதிகம்;    கக்கூசுகளோ
மிகக் கொஞ்சம். ஆகையால், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது
அவசியமாயிற்று. ஆனால், அந்த வேலை நான்