பக்கம் எண் :

272சத்திய சோதனை

Untitled Document
     “இளைஞரே, அதுதான்      சரியான மனப்பான்மை” என்றார்.
தம்மைச் சுற்றிலும் இருந்த தொண்டர்களை விளித்து, “இந்த இளைஞர்
என்ன சொன்னார் என்பது      உங்களுக்குக் கேட்டதா?” என்றார்.

     பிறகு என்னைப் பார்த்து அவர் கூறியதாவது: “அப்படியானால்
சரி, இங்கே கடிதங்கள்      பெருங்குவியலாகக் கிடக்கின்றன. அந்த
நாற்காலியில்     உட்கார்ந்துகொண்டு,    அவற்றைக் கவனியுங்கள்.
நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பார்க்க  வருகிறார்கள் என்பதை
நீங்களும் கவனிக்கிறீர்கள். நான் என்ன செய்வது?     அவர்களைச்
சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த      வேலையற்றவர்கள் எழுதிக்
குவித்துக் கொண்டிருக்கும்     கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக்
கொண்டிருப்பதா? இந்த வேலையை     ஒப்படைப்பதற்கு என்னிடம்
குமாஸ்தாக்கள் இல்லை.     இக் கடிதங்களில் பலவற்றில்  ஒன்றுமே
இருக்காது என்றாலும், அவற்றை        நீங்கள் படித்துப் பாருங்கள்.
அவசியம் என்று தோன்றும் கடிதங்களுக்கு    அவை கிடைத்ததாகப்
பதில் எழுதுங்கள். கவனித்துப் பதில்    எழுத வேண்டியவை என்று
தோன்றும் கடிதங்களை என்னிடம் காட்டுங்கள்.”

     அவர் என்னிடம் வைத்த            நம்பிக்கையைக் குறித்து
மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீ கோஷால்,     இவ் வேலையை என்னிடம்
கொடுத்த போது என்னை           அவருக்குத் தெரியாது. பிறகே
என்னைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

     அக்கடிதக் குவியலைப் பைசல்         செய்யும் வேலை மிக
எளிதானது என்பதைக் கண்டேன். சீக்கிரத்திலேயே அவ் வேலையை
முடித்துவிட்டேன். ஸ்ரீ கோஷால்    அதிகச் சந்தோஷம் அடைந்தார்.
அவர் ஓயாது பேசும் சுபாவமுள்ளவர்.மணிக்கணக்கில் பேசித் தீர்த்து
விடுவார்.       என்னுடைய       வரலாற்றைக் குறித்து என்னைக்
கேட்டுக்கொஞ்சம் தெரிந்து கொண்டதும், எனக்குக் குமாஸ்தா வேலை
கொடுத்ததற்காக வருத்தப்பட்டார். அதற்கு நான்,     “இதைப் பற்றித்
தயவு செய்து நீங்கள் கவலைப்படவேண்டாம்.   தங்களுக்கும் முன்பு
நான் எம்மாத்திரம்?      காங்கிரஸ் தொண்டிலேயே வயது முதிர்ந்து
நரைத்துப்போனவர்கள் நீங்கள். ஆனால், நானோ,   அனுபவமில்லாத
இளைஞன். இந்த வேலையை நீங்கள்    என்னிடம் கொடுத்ததற்காக
உங்களுக்கு நன்றி செலுத்த         நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
ஏனெனில், நான் காங்கிரஸ் வேலை செய்ய விரும்புகிறேன். நீங்களோ,
விவரங்களை அறிந்துகொள்ளுவதற்கான    அரியவாய்ப்பை எனக்கு
அளித்திருக்கிறீர்கள்” என்று அவருக்குக் கூறினேன்.

     “உண்மையைச்    சொல்லுவதென்றால்,   ஒருவருக்கு இருக்க
வேண்டிய சரியான மனோபாவம் இதுதான். ஆனால்,      இக்கால