பக்கம் எண் :

276சத்திய சோதனை

Untitled Document
ஆகவே, நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். மணியடித்ததுமே
உட்கார்ந்துவிட்டேன்.     ஆனால், ஸர் பிரோஸ்ஷாவுக்குச் சரியான
பதில் அப்பாடலில் அடங்கியிருக்கிறது என்று குழந்தை போன்ற என்
புத்தி எண்ணியது. தீர்மானம் நிறைவேறிவிட்டது என்பதைக் குறித்துச்
சொல்லவேண்டியதில்லை. அந்த நாட்களில்  காங்கிரஸ் மகாநாட்டிற்கு
வேடிக்கை       பார்க்க வருவோருக்கும் பிரதிநிதிகளுக்கும் அதிக
வித்தியாசம் எதுவும் இல்லை.           ஒவ்வொருவரும் கையைத்
தூக்குவார்கள்:    எல்லாத் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேறும்.
என் தீர்மான விஷயத்திலும்    இதே தான் நடந்ததாகையால் அதன்
முக்கியத்துவம் போய்விட்டதாகவே நான்    கருதினேன். என்றாலும்,
காங்கிரஸில் அது நிறைவேறியது என்பது மாத்திரமே என் மனத்திற்கு
மகிழ்ச்சியை அளிக்கப்         போதுமானதாக இருந்தது. காங்கிரஸ்,
முத்திரை      வைத்துவிட்ட தென்றால்,     அதை நாடு முழுவதும்
அங்கீகரித்து விட்டது என்று           ஆகுமாகையால் எவருக்கும்
மகிழ்ச்சியளிக்க அதுவே போதும்.

16 லார்டு கர்ஸானின் தர்பார்

     காங்கிரஸ் மகாநாடு                    முடிந்தது. ஆனால்,
தென்னாப்பிரிக்காவிலிருந்த          வேலை சம்பந்தமாக வர்த்தகச்
சங்கத்தையும் மற்றும் பலரையும் நான்     காணவேண்டியிருந்ததால்
கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கினேன்.இத் தடவை ஹோட்டலில்
தங்கவில்லை. அதற்குப் பதிலாக,          ‘இந்தியா கிளப்’பில் ஓர்
அறையில் தங்குவதற்கு வேண்டிய     அறிமுகத்தைப் பெற ஏற்பாடு
செய்துகொண்டேன். அந்தக் கிளப் உறுப்பினர்களில் சில பிரபலமான
இந்தியரும் உண்டு.              அவர்களுடன் தொடர்புகொண்டு,
தென்னாப்பிரிக்காவில்        இருக்கும் வேலையில் அவர்களுக்குச்
சிரத்தையை உண்டாக்க வேண்டும் என்றும் எண்ணினேன். பிலியர்டு
விளையாடுவதற்காகக்       கோகலே  இந்தக் கிளப்புக்கு அடிக்கடி
வருவது உண்டு.       நான் கல்கத்தாவில்         கொஞ்ச காலம்
தங்கவேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்ததும்,  தம்முடன் வந்து
தங்குமாறு அவர்        என்னை அழைத்தார்.   இந்த அழைப்பை
நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால்,     நானாக அங்கே
போவது சரியல்ல என்று    எண்ணினேன். அவர் இரண்டொரு நாள்
பொறுத்துப் பார்த்தார். நான் வராது போகவே அவரே  நேரில் வந்து
என்னை அழைத்துச் சென்றார். கூச்சப்படும் என்      சுபாவத்தைக்
கண்டுகொண்டதும் அவர் கூறியதாவது: “காந்தி, நீங்கள்  இந்நாட்டில்
இருக்க வேண்டியவர். ஆகவே,            இப்படிக் கூச்சப்பட்டுக்
கொண்டிருந்தால்   காரியம் நடக்காது. எவ்வளவு பேரோடு பழகுவது
சாத்தியமோ     அவ்வளவு பேரோடும்           நீங்கள் பழக்கம்
வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள்     காங்கிரஸ் வேலை செய்ய
வேண்டும் என்று