பக்கம் எண் :

282சத்திய சோதனை

Untitled Document
ஆகையால், அவரை எதிர்த்துப்பேச எனக்குத் துணிவு வருவதில்லை.
மேற்கண்ட பதில் எனக்குத்        திருப்தியளிக்கவில்லையெனினும்
மௌனமாக இருந்துவிட்டேன்.   ஒருவருக்கு என்னதான் அதிகமான
வேலை இருந்தாலும் சரி,      அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம்
வைத்துக் கொள்ளுகிறாரோ         அதே போலத் தேகாப்பியாசம்
செய்வதற்கும் அவகாசம்         தேடிக்கொள்ள வேண்டும் என்று
அப்பொழுது கருதினேன்.        இன்றும் அவ்வாறே கருதுகிறேன்.
அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும்      சக்தியைக்
குறைத்து விடுவதற்குப் பதிலாக       அதிகப்படுத்தவே செய்கிறது
என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

18 கோகலேயுடன் ஒரு மாதம் -2


     நான் கோகலேயுடன்        தங்கியிருந்தபோது எப்பொழுதும்
வீட்டிலேயே இருந்துவிடாமல் வெளியிலும் சுற்றிக்  கொண்டிருந்தேன்.
இந்தியாவில் இந்தியக்   கிறிஸ்தவர்களைச் சந்தித்து. அவர்களுடைய
நிலைமையையும் தெரிந்து கொள்ளுவேன் என்று  தென்னாப்பிரிக்கக்
கிறிஸ்தவ நண்பர்களிடம் சொல்லி இருந்தேன்.      பாபு காளிசரண்
பானர்ஜியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அவரிடம்  எனக்குப்

     பெரு மதிப்பும் இருந்தது.      காங்கிரஸின் நடவடிக்கைகளில்
அவர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். சாதாரணமாக இந்தியக்
கிறிஸ்தவர்கள், காங்கிரஸில் சேராமல் ஒதுங்கி இருந்து விடுகிறார்கள்;
ஹிந்துக்கள், முஸ்லிம்களுடன்  கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து
விடுகின்றனர் என்ற சந்தேகம்          எனக்கு இருந்தது. ஆனால்,
பாபுகாளிசரண் பானர்ஜி விஷயத்தில்   அத்தகைய சந்தேகம் எதுவும்
எனக்கு இல்லை. அவரைச் சந்திக்க     எண்ணியிருக்கிறேன் என்று
கோகலேயிடம் சொன்னேன். “நீங்கள் அவரைப்  பார்ப்பதால் என்ன
பயன்? அவர் மிகவும்     நல்லவர். ஆனால், உங்களுக்குத் திருப்தி
அளிக்கமாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவரை  எனக்கு நன்றாகத்
தெரியும். என்றாலும், நீங்கள் விரும்பினால் அவரைப் பார்த்து விட்டு
வாருங்கள்” என்றார்.

     அவரைப் பார்க்க விரும்புவதாக அனுமதி  கோரி எழுதினேன்.
அவரும் உடனே பதில் அனுப்பினார்.      நான் அவரைப்பார்க்கச்
சென்ற அன்று அவருடைய மனைவி மரணத்   தறுவாயில் இருந்தார்
என்பதை அறிந்தேன். காங்கிரஸில் அவரை      நான் பார்த்தபோது
கால்சட்டையும் கோட்டும்      போட்டுக் கொண்டிருந்தார். ஆனால்,
இப்பொழுதோ ஒரு வங்காளி       வேட்டி கட்டிக்கொண்டு சட்டை
போட்டிருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன். அச்சமயம் நான்
கால்சட்டையும் பார்ஸிக்கோட்டும்         அணிந்திருந்த போதிலும்
அவருடைய எளிய உடை எனக்குப்