பக்கம் எண் :

கோகலேயுடன் ஒரு மாதம் - 2283

Untitled Document
பிடித்திருந்தது. அனாவசியப் பேச்சு எதுவும்   வைத்துக்கொள்ளாமல்
எனக்கு இருந்த சந்தேகங்களை நேரடியாக   அவருக்குக் கூறினேன்.
“மனிதன் ஆரம்பத்தில்          பாவம் செய்தே கேடுற்றான் என்ற
தத்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”        என்று அவர்
என்னைக் கேட்டார். “ஆம். நம்பிக்கை உண்டு”         என்றேன்.

     “அப்படியானால் சரி. ஹிந்து மதம்      அதற்கு விமோசனம்
அளிப்பதில்லை. கிறிஸ்தவ மதம் அளிக்கிறது”        என்று அவர்
சொல்லிவிட்டு, மேலும் கூறியதாவது:          “பாவத்தின் ஊதியம்
மரணமேயாகும். ஏசுவினிடம்         அடைக்கலம் புகுவது ஒன்றே
அதனின்றும் விடுதலை பெறுவதற்குள்ள     ஒரே மார்க்கம் என்று
பைபிள் கூறுகிறது.”

     பகவத் கீதை கூறும் பக்தி மார்க்கத்தைக்       குறித்து நான்
சொன்னேன். ஆனால், அது பயன்படவில்லை.    அவர் என்னிடம்
காட்டிய அன்பிற்கு நன்றி கூறிவிட்டு,  விடை  பெற்றுக்கொண்டேன்.
எனக்குத் திருப்தியளிக்க          அவர் தவறி விட்டார். ஆனால்,
இச் சந்திப்பினால் நான் பயன் அடைந்தேன்.

     இந்த நாட்களில் நான் கல்கத்தாத்       தெருக்களில் இங்கும்
அங்குமாகத் திரிந்துகொண்டிருந்தேன்.        அநேக இடங்களுக்கு
நடந்தே போய்வருவேன்.எனது தென்னாப்பிரிக்காவின்    வேலைக்கு
நீதிபதி மித்தர்,    ஸர் குருதாஸ் பானர்ஜி ஆகியவர்களின்   உதவி
எனக்கு வேண்டியிருந்தது.        அவர்களைப் போய்ப் பார்த்தேன்.
அதே சமயத்தில் ஸர் பியாரி மோகன் முக்கர்ஜியையும்  சந்தித்தேன்.

     காளி கோயிலைப்பற்றிக் காளி சரண் பானர்ஜி      என்னிடம்
கூறினார். முக்கியமாக, புத்தகங்களிலும்       அதைக் குறித்து நான்
படித்திருந்தால் அதைப் பார்க்க ஆவலுடன்    இருந்தேன். ஆகவே,
ஒரு நாள் அங்கே போனேன். அதே பகுதியில்தான் நீதிபதி மித்தரின்
வீடும் இருந்தது. எனவே, நான் அவரைப் போய்ப் பார்த்த   அன்றே
காளி கோயிலுக்கும் போனேன்.     காளிக்குப் பலி கொடுப்பதற்காக
ஆடுகள், மந்தை மந்தையாகப்    போய்க்கொண்டிருந்ததை வழியில்
பார்த்தேன்.      கோயிலுக்குப் போகும் சந்தின் இரு பக்கங்களிலும்
வரிசையாகப்        பிச்சைக்காரர்கள் இருந்தனர். அவர்களில் சில
சாதுக்களும் இருந்தனர். உடல் வலுவுடன் இருக்கும் யாசகர்களுக்குப்
பிச்சை போடுவதில்லை என்ற கொள்கையில் நான் அந்த நாளிலேயே
உறுதியுடன் இருந்தேன். அவர்களில்         ஒரு கூட்டம் என்னை
விரட்டிக்கொண்டு வந்தது. சாதுக்களில் ஒருவர்   ஒரு தாழ்வாரத்தில்
உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னை நிறுத்தி,     “தம்பி, நீ
எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.          நான் கோயிலுக்குப்
போகிறேன் என்றதும், என்னையும்        என்னுடன் வந்தவரையும்
உட்காரும்படி சொன்னார். அப்படியே