பக்கம் எண் :

கோகலேயுடன் ஒரு மாதம் - 3285

Untitled Document
முடியாது.   ‘அக்கிரமமாக பலியிடப்படுவதிலிருந்து இந்த ஆடுகளைக்
காப்பாற்றிவிடலாம்.’  என்று நான் நம்புவதற்கு முன்னால் நான் அதிக
சுயத் தூய்மையையும் தியாக உணர்ச்சியையும் அடைந்தாக வேண்டும். ‘இந்தத் தூய்மையையும் தியாகத்தையும் அடையப் பாடுபடுவதில் நான்
உயிர் துறக்க வேண்டும்’ என்று   இன்று எண்ணுகிறேன்.  இத்தகைய
கோரமான பாவத்திலிருந்து நம்மை விடுவித்து,         கோயிலையும்
புனிதப்படுத்துவதற்கு தெய்வீகக் கருணையுடன் கூடிய    ஒரு பெரிய
ஆத்மா,ஆணாகவோ பெண்ணாகவோ, இப்புவியில்  பிறக்க வேண்டும்
என்பதே என்னுடைய இடை விடாத பிரார்த்தனை.      எவ்வளவோ
அறிவும், தியாகமும், உணர்ச்சி வேகமும்        கொண்ட வங்காளம்,
இப்படுகொலைகளை         எப்படிச் சகித்துக்  கொண்டிருக்கிறது?

19. கோகலேயுடன் ஒரு மாதம் - 3

     மதத்தின் பெயரால் காளிக்கு அளிக்கப்பட்ட கொடூரமான பலி,
வங்காளிகளின் வாழ்க்கையை   அறிந்து கொள்ள வேண்டும் என்று
எனக்கு       இருந்த ஆர்வத்தை   அதிகமாக்கி விட்டது. பிரம்ம
சமாஜத்தைக் குறித்து      அதிகமாகப் படித்திருக்கிறேன்; நிறையக்
கேள்விப் பட்டும் இருக்கிறேன்.        பிரதாப் சந்திர மஜு ம்தாரின்
வாழ்க்கையைப் பற்றியும்       சிறிது அறிவேன் அவர் பேசிய சில
கூட்டங்களுக்கும்      போயிருக்கிறேன்.     கேசவசந்திரசேனரின்
வரலாற்றைக் குறித்து, அவர்        எழுதிய நூலை வாங்கி அதிகச்
சிரத்தையுடன் படித்தேன். சாதாரணப் பிரம்ம சமாஜத்திற்கும்   ஆதி
பிரம்ம சமாஜத்திற்கும்           உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து
கொண்டேன்.          பண்டித சிவநாத சாஸ்திரியைச் சந்தித்தேன்.
பேராசிரியர்     கதாவடேயுடன் மகரிஷி தேவேந்திரநாத டாகுரையும்
பார்க்கப் போனேன். அச் சமயம்          அவரைப் பார்க்க யாரும்
அனுமதிக்கப் படாததனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. ஆனால்,
அவர் இருப்பிடத்தில் நடந்த             பிரம்ம சமாஜ விழாவுக்கு
அழைக்கப்பட்டிருந்தோம். அங்கே இனிய     வங்காளி சங்கீதத்தைக்
கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமுதல் நான்   வங்காளி சங்கீதப்
பிரியனானேன்.

     பிரம்ம சமாஜத்தைக் குறித்து       வேண்டிய அளவு தெரிந்து
கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப்       பார்க்காமல்
என்னால் திருப்தியடைய           முடியவில்லை. ஆகவே,  அதிக
உற்சாகத்தோடு        பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக,
முழுத்தூரமும் நடந்தே          அங்கே சென்றதாக ஞாபகம். மடம்
அமைந்திருந்த ஏகாந்தமான   இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம்
ஊட்டியது. சுவாமி,            தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார்;
நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று     சொல்லக்