பக்கம் எண் :

286சத்திய சோதனை

Untitled Document
கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.

     பிறகு சகோதரி நிவேதிதா      இருக்கும் இடத்தை விசாரித்து
தெரிந்துகொண்டு, சௌரிங்கி மாளிகையில்    அவரைச் சந்தித்தேன்.
அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள்       என்னைத் திடுக்கிடச்
செய்தன. அவரிடம் பேசியப் பிறகு,      நாங்கள் இருவரும் அநேக
விஷயங்களில்    ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன்.
இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன்.      அவரைப் போன்ற
உணர்ச்சி வேகமுள்ள           ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு
விஷயத்திலும்        கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில்
ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார்.

     ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச்
சந்தித்தேன். பேஸ்தன்ஜியின்        வயதான தாயாருடன் சகோதரி
நிவேதிதா பேசிக்கொண்டிருந்த      சமயத்தில் நான் அங்கே போக
நேர்ந்தது. ஆகவே,          அவ்விருவருக்கும் மொழி பெயர்த்துக்
கூறுபவனானேன். அவருடன் எந்த   ஒருமைப்பாட்டுக்கும் என்னால்
வரமுடியவில்லை என்றாலும்,      ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு
இருந்த அளவுகடந்த         அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க
என்னால் முடியவில்லை.        அவர் எழுதிய நூல்களைக் குறித்து
பின்னால் தான் அறிந்தேன்.

     தென்னாப்பிரிக்காவிலிருக்கும்        வேலை    சம்பந்தமாக
கல்கத்தாவில் இருக்கும் முக்கியமானவர்களை சந்தித்துப் பேசுவதிலும்
நகரில் இருக்கும்     மத சம்பந்தமான   பொது ஸ்தாபனங்களுக்குச்
சென்று, அவற்றை அறிந்து கொள்வதிலும்   ஒவ்வொரு நாளும் என்
நேரத்தைச் செலவிட்டு வந்தேன். டாக்டர். மல்லிக்கின்  தலைமையில்
நடந்த ஒரு கூட்டத்தில், போயர் யுத்தத்தில்      இந்திய வைத்தியப்
படையினர் செய்த            வேலைகளைக் குறித்துப் பேசினேன்.
‘இங்கிலீஸ்மன்’   பத்திரிக்கையுடன் எனக்கு ஏற்பட்டிருந்த அறிமுகம்
இச் சமயத்தில் எனக்கு உதவியாக இருந்தது.    அப்பொழுது அதன்
ஆசிரியர் ஸ்ரீசாண்டர்ஸ் நோயுற்றிருந்தார். என்றாலும், 1890-ல் உதவி
செய்ததைப் போன்றே அதிக உதவியைச் செய்தார்.   என் பிரசங்கம்
ஸ்ரீ கோகலேக்கு         அதிகமாகப் பிடித்திருந்தது. டாக்டர். ராய்,
அதைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு,    அதிக மகிழ்ச்சியடைந்தார்.

     கோகலேயுடன்           நான் தங்கியிருந்ததனால் இவ்வாறு
கல்கத்தாவில் என் வேலைகள்    மிகவும் எளிதாயின. முக்கியமான
வங்காளிக்        குடும்பங்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.
வங்காளத்துடன் நான் நெருங்கிய    தொடர்பு கொள்ளுவதற்கு இது
ஆரம்பமாகவும் அமைந்தது.

     மறக்க முடியாத         அந்த மாதத்தைப்பற்றிய மற்றும் பல
நினைவுகளைக் கூறாமல் தாண்டிச் செல்ல வேண்டியவனாகவே நான்
இருக்கிறேன். இதற்கிடையில்          பர்மாவுக்குப் போய் விட்டுச்