பக்கம் எண் :

கோகலேயுடன் ஒரு மாதம் - 3287

Untitled Document
சீக்கிரமே திரும்பியதைக் குறித்தும்    அங்கிருக்கும் பொங்கிகளைப்
பற்றியும் மாத்திரம் கொஞ்சம்           குறிப்பிட்டு விட்டு, மேலே
செல்லுகிறேன். பொங்கிகள் என்னும்        அந்தச் சந்நியாசிகளின்
சோம்பல் வாழ்க்கையைக் கண்டு     என் மனம் வேதனைப்பட்டது.
அங்கே தங்கக் கோபுரத்தையும் பார்த்தேன்.   கோயிலில் எண்ணற்ற
சிறு மெழுகுவத்திகள்     கொழுத்தி வைக்கப்பட்டிருந்தது எனக்குப்
பிடிக்கவில்லை.          கர்ப்பக் கிரகத்தில் எலிகள் அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருந்தன. இது, மோர்வியில்      சுவாமி தயானந்தருக்கு
ஏற்பட்ட அனுபவத்தை          எனக்கு நினைவூட்டியது. பர்மியப்
பெண்களின் சுயேச்சையும்        சுறுசுறுப்பும் என்னைக் கவர்ந்தன.
ஆனால், பர்மிய      ஆண்களின் மந்தப் போக்கோ எனக்கு மனக்
கஷ்டத்தை அளித்தது.       நான்            பர்மாவிலிருந்த சில
தினங்களுக்குள்ளேயே ஒன்று      தெரிந்து கொண்டேன். அதாவது,
‘பம்பாய் எவ்விதம் இந்தியா ஆகிவிடாதோ    அதே போல் ரங்கூன்
பர்மா ஆகிவிடாது’ என்பதை அறிந்தேன். இந்தியாவிலிருக்கும்   நாம்
எவ்விதம் பிரிட்டிஷ்    வர்த்தகர்களின் தரகர்களாக இருக்கிறோமோ
அதேபோல் பர்மாவிலும் நம்மவர்கள்,    ஆங்கில வியாபாரிகளுடன்
சேர்ந்து கொண்டு,                      பர்மிய மக்களைத் தமது
தரகர்களாக்கியிருக்கிறார்கள் என்பதையும்       கண்டுகொண்டேன்.

     பர்மாவிலிருந்து நான் திரும்பி வந்ததும் கோகலேயிடம்   விடை
பெற்றுக்கொண்டேன்.       அவரிடமிருந்து பிரிவது எனக்கு மிகவும்
வருத்தமாக இருந்தது. ஆனால்,         வங்காளத்தில் முக்கியமாகக்
கல்கத்தாவில் எனக்கு இருந்த வேலைகள் முடிந்து விட்டன.  இனியும்
அங்கே நான் தங்குவதற்கு எவ்வித முகாந்தரமும் இல்லை.

     ஓரிடத்தில் நிலையாகத் தங்கிவிடுவதற்கு முன்னால்,    இந்தியா
முழுவதையும், மூன்றாம் வகுப்பு ரெயிலில் பிரயாணம் செய்து பார்த்து,
மூன்றாம் வகுப்புப்            பிரயாணிகளின் கஷ்டங்களை நானே
அறிந்துகொள்ளுவது           என்று எண்ணினேன். இதைப்பற்றிக்
கோகலேயிடம் பேசினேன். ஆரம்பத்தில்   என் யோசனையை அவர்
பரிகசித்தார். நான் காண விரும்புவது     இன்னதென்பதை அவருக்கு
விளக்கிக் கூறியதும் அவரும் உற்சாகமாக        என் யோசனையை
அங்கீகரித்தார். ஸ்ரீமதி அன்னி பெஸன்ட் நோயுற்று,     அப்பொழுது
காசியில் இருந்து வந்தார்.          அவருக்கு எனது வணக்கத்தைச்
செலுத்துவதற்கு முதலில்    காசிக்குப் போவது என்று திட்டமிட்டேன்.

     மூன்றாம் வகுப்பு         வண்டிப் பிரயாணத்திற்கு வேண்டிய
ஏற்பாடுகளை நான் புதிதாகச்      செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
கோகலே எனக்கு ஒரு பித்தளைச்        சாப்பாட்டுப் பாத்திரத்தைக்
கொடுத்தார். அதில் மிட்டாய்களையும்   பூரியையும் நிறைய வைத்தார்.
பன்னிரெண்டு அணாக் கொடுத்து,    ஒரு கித்தான் பை வாங்கினேன்.
சாயக்         கம்பளியினாலான   மேற் சட்டை ஒன்றையும் வாங்கி
கொண்டேன்.          இந்த சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஓர்