பக்கம் எண் :

288சத்திய சோதனை

Untitled Document
உள்சட்டை ஆகியவைகளை வைத்துக் கொள்ள அந்த கித்தான் பை.
போர்த்துக்கொள்ள          ஒரு துப்பட்டியும்,  தண்ணீர் வைத்துக்
கொள்ளுவதற்குச் செம்பும்       என்னிடம் இருந்தன. இவ்விதமான
ஏற்பாடுகளுடன்      நான் பிரயாணத்திற்குத் தயாரானேன். என்னை
வழியனுப்புவதற்காகக் கோகலேயும்    டாக்டர் ராயும் ஸ்டேஷனுக்கு
வந்திருந்தார்கள்.        ஸ்டேஷனுக்கு வரும் சிரமம் அவர்களுக்கு
வேண்டாம் என்றே அவர்கள்    இருவரையும் கேட்டுக்கொண்டேன்.
ஆனால், அவர்கள் கேட்கவில்லை.        ‘நீங்கள் முதல் வகுப்பில்
சென்றால் நான் வந்திருக்க மாட்டேன். இப்பொழுதோ நான் கட்டாயம்
வர வேண்டும்’ என்றார், கோகலே.

     கோகலே, பிளாட்பாரத்திற்குள்     வந்தபோது அவரை யாரும்
தடுக்கவில்லை. அவர்             வேட்டி கட்டிக்கொண்டு, பட்டுத்
தலைபாகையும் குட்டைச் சட்டையும்   போட்டிருந்தார். டாக்டர் ராய்,
வங்காளி உடையில் வந்தார். அவரை   டிக்கெட் பரிசோதகர் நிறுத்தி
விட்டார். அவர் தமது நண்பர் என்று     கோகலே சொன்ன பிறகே
அவரை அனுமதித்தார். இவ்விதம் அவர்களுடைய நல்லாசியுடன் என்
பிரயாணம் ஆரம்பமாயிற்று.

20 காசியில்

     கல்கத்தாவிலிருந்து ராஜ்கோட்டுக்கு என் பிரயாணம்;   வழியில்
காசி, ஆக்ரா, ஜெய்ப்பூர், பாலன்பூர் ஆகிய     ஊர்களில் தங்குவது
என்று திட்டமிட்டேன். இவைகளைத் தவிர அதிக ஊர்களைப் பார்க்க
எனக்கு அவகாசம் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒரு நாள் தங்கினேன்.
பாலன்பூர் தவிர மற்ற ஊர்களில் சாதாரண    யாத்திரிகர்களைப்போல்
தரும சத்திரங்களிலோ, பண்டாக்கள் வீடுகளிலோ   இருந்தேன். இந்த
யாத்திரையில் ரெயில் கட்டணம் உள்பட ரூ.31-க்கு அதிகமாக   நான்
செலவு செய்யவில்லை என்பதே எனக்கு ஞாபகம்.

     ரெயிலில் சாதாரண வண்டிகளை விட    மெயில் வண்டிகளில்
கூட்டம் அதிகம்; கட்டணமும்         அதிகம் என்பதை அறிவேன்.
அதனால், மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில்    மெயில் ரெயில்களை
விடச் சாதாரண ரெயிலிலேயே          நான் பிரயாணம் செய்தேன்.

     மூன்றாம் வகுப்பு வண்டிகள்          இப்பொழுது எவ்வளவு
அசுத்தமாக        இருக்கின்றனவோ    அவ்வளவு அசுத்தமாகவே
அப்பொழுதும் இருந்தன. கக்கூசுகளும் இப்போதிருப்பதைப் போலவே
அப்பொழுதும் அசுத்தமாக இருந்தன. இப்பொழுது   ஏதோ கொஞ்சம்
அபிவிருத்தி இருக்கக்கூடும். ஆனால்,   முதல் வகுப்புப் பிரயாணிக்கு
அளிக்கப்படும்         வசதிக்கும், மூன்றாம் வகுப்புப் பிரயாணிக்கு
அளிக்கப்படும் வசதிக்கும் உள்ள வித்தியாசம், இவ்விரு வகுப்புகளின்
கட்டணங்களுக்கும் உள்ள வித்தியாசத்திற்குக்