பக்கம் எண் :

திருட்டும் பரிகாரமும்29

Untitled Document
போதெல்லாம், என்னுடைய தவறுக்காகவும்,  காமக் குரூரத்துக்காகவும்
என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நண்பரிடம் நான்
கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும்   வருந்துகிறேன்.

8. திருட்டும் பரிகாரமும்


     புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும்,   நான் செய்த
வேறு சில    தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை என்
விவாகத்திற்கு முன்போ, விவாகமான   உடனேயோ நடந்தவை. நானும்
என் உறவினர்    ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம்.
சிகரெட் பிடிப்பதில்       நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ,
சிகரெட்டுப் புகையின்   வாசனை எங்களுக்குப் பிரியமாக இருந்ததோ
இதற்குக் காரணம் அல்ல. எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை
விடுவதில் ஒருவகையான     இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து
கொண்டோம்.      என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம்
உண்டு.அவர் புகை பிடிப்பதைப்           பார்த்தபோது நாங்களும்
அவரைப்போல் செய்ய வேண்டும் என்று    நினைத்தோம். ஆனால்,
எங்களிடம்    காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப்
போடும்    சிகரெட்டுத்         துண்டுகளைத் திருடி உபயோகிக்க
ஆரம்பித்தோம்.

     ஆனால், சிகரெட்டுத்         துண்டுகள்      எப்பொழுதும்
கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும்
இல்லை. ஆகவே? பீடி வாங்க வேலைக்காரன்  பணத்திலிருந்து காசு
திருடக் கிளம்பினோம். பீடியை      வாங்கி எங்கே வைப்பது என்ற பிரச்னைவந்தது.பெரியவர்கள்   முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க
முடியாது. சில வாரங்கள் வரையில்   திருடிய காசுகளைக்
கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.    இதற்கு மத்தியில் ஏதோ ஒரு
செடியின்  தண்டு, துவாரங்கள் உள்ளது என்றும்,     சிகரெட்டைப்
போல அதைப் பிடிக்கலாம் என்றும்     கேள்விப்பட்டோம். அதைத்
தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.

     இவை போன்றவைகளினாலெல்லாம்     எங்களுக்குத் திருப்தி
உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல்   செய்ய எங்களுக்கு
சுதந்திரம் இல்லையே என்ற         உணர்ச்சி மனத்தில் எழுந்தது.
பெரியவர்களின் அனுமதியில்லாமல்     எதையுமே நாங்கள் செய்ய
முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத்  தோன்றியது. கடைசியாக
வாழ்வே  முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு
விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!

     ஆனால், தற்கொலை செய்து   கொள்ளுவது எப்படி? விஷம்
எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான