பக்கம் எண் :

290சத்திய சோதனை

Untitled Document
அவசியமாகும் போதெல்லாம்        புகார்களை அனுப்ப வேண்டும்.
தங்களுக்கு வசதியைத் தேடிக் கொள்ளுவதற்காக லஞ்சம் கொடுப்பது
போன்ற சட்ட விரோதமான      காரியங்களை இந்தப் படித்தவர்கள்
செய்யாது இருக்க வேண்டும்.       விதிகளை யார் மீறி நடந்தாலும்
அதைச்   சகித்துக் கொண்டு இருந்துவிடக்கூடாது. இவற்றை எல்லாம்
செய்தால்,      அதிக அபிவிருத்தி ஏற்படும் என்று நான் நிச்சயமாக
நம்புகிறேன்.

     1918-19-இல் நான் கடுமையான   நோய்வாய்ப்பட்டதால், எனது
மூன்றாம்           வகுப்புப் பிரயாணத்தைத் துரதிருஷ்ட வசமாகக்
கைவிடும்படி நேர்ந்தது.          இது எனக்கு   இடைவிடாத மன
வேதனையாகவும்          வெட்கமாகவும் ஆகிவிட்டது. ஏனெனில்,
முக்கியமாக மூன்றாம் வகுப்புப்      பிரயாணிகளின் கஷ்டங்களைப்
போக்கியாக வேண்டும் என்ற     கிளர்ச்சி வலுவடைய ஆரம்பித்த
சமயத்தில் இவ்வாறு நேர்ந்தது.      ஏழைகளான ரெயில்வே, கப்பல்
பிரயாணிகளின் கஷ்டங்கள், அக் கஷ்டங்களை  அப்பிரயாணிகளின்
பழக்கங்கள் அதிகமாக்குவது,வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அரசாங்கம்
அனுமதித்து வரும்      அக்கிரமமான வசதிகள் இவை போன்றவை
முக்கியமான    விஷயங்களாகும். விடாமுயற்சியும் திறமையும் உள்ள
இரண்டொரு பொது ஜன ஊழியர்கள்    தங்கள் முழு நேரத்தையும்
செலவிட்டு,        வேலை செய்வதற்கு இவை ஏற்ற துறைகளாகும்.

     ஆனால், மூன்றாம் வகுப்புப்   பிரயாணிகளை இதோடு விட்டு
விட்டுக் காசியில் எனக்கு        ஏற்பட்ட அனுபவங்களுக்கு இனி
வருகிறேன். காலையில்          அங்கே போய்ச் சேர்ந்தேன். ஒரு
பண்டாவின்             வீட்டில் தங்குவது என்று தீர்மானித்தேன்.
ரெயிலிலிருந்து இறங்கியதுமே,     அநேக பிராமணர்கள் என்னைச்
சுற்றி வளைத்துக் கொண்டு விட்டனர்.      அவர்களுள் கொஞ்சம்
சுத்தமாகவும், மற்றவர்களைவிடச் சுமாராகவும் தோன்றிய ஒருவரைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அவர் வீட்டுக்குச்  சென்றேன். நான்
சரியாகவே தேர்ந்தெடுத்திருந்தேன் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அவருடைய வீட்டு முற்றத்தில்       ஒரு பசு கட்டியிருந்தது. நான்
தங்குவதற்குக் கொடுத்திருந்த இடம் மாடியில்.   கங்கைக்குப் போய்
வைதிக முறைப்படிஸ்நானம் முதலிய  அனுஷ்டானங்களையெல்லாம்
முடித்துக்கொள்ளாமல் சாப்பிட      நான் விரும்பவில்லை. இதற்கு
வேண்டிய ஏற்பாடுகளைப் பண்டா செய்தார். அவருக்கு ஒரு ரூபாய்
நான்கணாவுக்கு மேல்     எக்காரணத்தை முன்னிட்டும் தட்சிணை
கொடுக்கமாட்டேன் என்பதை           முன்கூட்டியே அவரிடம்
சொல்லிவிட்டேன். ஆகையால்,         இதை மனத்தில் வைத்துக்
கொண்டே ஏற்பாடுகளைச் செய்யும்படியும் சொன்னேன்.

     பண்டா மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டார்.“யாத்திரிகர்