பக்கம் எண் :

292சத்திய சோதனை

Untitled Document
ஆகையால், ஒரு தம்படி            கொடுத்தேன். அங்கே இருந்த
பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத்       தம்படியை வீசி எறிந்து
விட்டார். “இந்த அவமரியாதை    உன்னை நேரே நரகத்திற்குத்தான்
கொண்டு போகும்!” என்று கூறி என்னைச் சபித்தார்.

     இதைக் கேட்டு நான்    பரபரப்படைந்துவிடவில்லை. “மகராஜ்!
என் விதி எப்படியானாலும் சரி. ஆனால்,          இப்படியெல்லாம்
பேசுவது உங்களைப்         போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது.
விருப்பமிருந்தால்        அந்தத் தம்படியை எடுத்துக்கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் அதையும்    நீங்கள் இழந்து விடுவீர்கள்” என்றேன்.

     “போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்.

     தரையில் தம்படியை          எடுத்துக்கொண்டு நான் நடக்க
ஆரம்பித்தேன். பிராமணர் ஒரு தம்படியை இழந்தார்,   எனக்கு ஒரு
தம்படி மிச்சம் என்று என்னைப்    பாராட்டிக்கொண்டேன். ஆனால்,
மகராஜ், அந்தத் தம்படியையும்       விட்டுவிடக் கூடியவர்  அல்ல.
என்னைத் திரும்பக் கூப்பிட்டார். “அது சரி,      அந்தத் தம்படியை
இங்கே கொடுத்துவிட்டுப் போ.          உன்னைப்போலவே நானும்
இருந்துவிட முடியாது. உன்       தம்படியை வாங்கிக்கொள்ள நான்
மறுத்துவிட்டால் அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும்” என்றார். நான்
ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியை     அவரிடம் கொடுத்தேன்.
அப்புறம் ஒருமுறை பெருமூச்சு           விட்டுக்கொண்டு அப்பால்
போய்விட்டேன்.

     அதற்குப் பிறகு இரு முறை    காசி விஸ்வநாதர் கோயிலுக்குப்
போயிருக்கிறேன். ஆனால்,       அது ‘மகாத்மா’ பட்டம் என்னைப்
பீடித்த பிறகு. ஆகவே,      நான் மேலே கூறியிருப்பதைப் போன்ற
அனுபவங்கள் அப்பொழுது ஏற்படுவது அசாத்தியமாயின.  என்னைத்
தரிசிப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கும் மக்கள், கோயிலில் சுவாமியை
நான்       தரிசிப்பதற்கு என்னை        அனுமதிக்கமாட்டார்கள்.
‘மகாத்மா’க்களின் துயரங்கள் ‘மகாத்மா’க்களுக்கு மாத்திரமே தெரியும். மற்றபடி அழுக்கும்   சப்தமும் முன்பு இருந்தது போலவே இருந்தன.

     கடவுளின் எல்லையற்ற கருணையில்   யாருக்காவது சந்தேகம்
இருக்குமாயின், அவர்கள்       இப் புண்ணிய ஷேத்திரங்களுக்குப்
போய்ப் பார்ப்பார்களாக. மகா யோகியான கடவுள்,   தம் தெய்வீகப்
பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவு    வஞ்சகங்களையும்
அதர்மங்களையும்        சகித்துக்கொண்டிருக்கிறார்! “யே யதாமாம்
ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம்”         (மனிதன் எதை
விதைக்கிறானோ அதையே          அறுவடை செய்கிறான்) என்று
ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை அனுபவிக்காமல் யாரும்
தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன்