| பம்பாயில் குடியேறினேன்  | 293 |  
 
 Untitled Document      தலையிடுவதற்கு அவசியமே இல்லை.         அவர் இச் சட்டத்தை       இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.             கோயிலுக்குப் போய் வந்த பின்னர்      ஸ்ரீ மதி பெஸன்டைப் பார்க்கப் போனேன்.         அவர் நோயுற்றிருந்து அப்பொழுதுதான் குணமடைந்தார் என்பதை அறிவேன். என்   பெயரை எழுதி உள்ளே அனுப்பினேன். அவர் உடனே வந்தார். அவருக்கு என் வணக்கத்தைச் செலுத்த வேண்டும்          என்று மாத்திரமே நான் விரும்பினேன். ஆகையால், “தங்களுக்கு உடல் நலமில்லை என்பதை அறிவேன். என் வணக்கத்தைத்      தங்களுக்குச் சரீர செலுத்திக்கொள்ள மாத்திரமே விரும்பினேன். தங்களுக்குச் சுகம்  இல்லாதிருந்தும் என்னைப் பார்க்க அன்புடன்                  தாங்கள் இசைந்ததற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குமேல்      தங்களுக்குத் தொந்தரவு கொடுக்க             நான் விரும்பவில்லை” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன்.
                		          | 21 பம்பாயில் குடியேறினேன்? |                             நான் பம்பாயில் குடியேறி, வக்கீல் தொழிலை நடத்திக் கொண்டு பொதுவேலையில் தமக்கு       உதவியாக இருக்க வேண்டும் என்று கோகலே அதிக ஆவலுடன் இருந்தார்.  அந்த நாளில் பொது வேலை என்றால் காங்கிரஸ் வேலையே.          கோகலேயின் உதவியினால் ஆரம்பமான ஸ்தாபனத்தின்    முக்கியமான வேலையும், காங்கிரஸின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டு போவதுதான்.
       கோகலேயின் யோசனை    எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், பாரிஸ்டராக இருந்து வெற்றி பெற முடியும்.  என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. முன்னால் நான்      இதில் கண்ட தோல்வியின் வருந்தத்தக்க நினைவுகள் இன்னும்         எனக்கு இருந்து வந்தன. கட்சிக்காரர்களைப் பெறுவதற்காக முகஸ்துதி செய்வதை  விஷம்போல நான் இன்னும் வெறுத்து வந்தேன்.
       ஆகையால், முதலில்    ராஜ்கோட்டில் தொழிலை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன்.            முன்னாலிருந்தே என் நலனை விரும்புகிறவரும், நான் இங்கிலாந்துக்குப்     போக வேண்டும் என்று தூண்டியவருமான கேவல்ராம் மாவிஜி தவே அங்கே இருந்தார். அவர் உடனேயே ஆரம்பமாக மூன்று     வக்காலத்துக்களைக் கொடுத்தார். அவைகளில் இரண்டு, கத்தியவார்          ராஜீய ஏஜெண்டின் நிதி உதவியாளர் முன்பு செய்யப்பட்டிருந்த அப்பீல்கள். மற்றொன்று, ஜாம் நகரில் அசல் வழக்கு கடைசியாகச்  சொன்ன இந்த வழக்கே மிகவும் முக்கியமானது. இந்த வழக்கைத் திறம்பட நான் நடத்த முடியும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை      என்று சொன்னேன். உடனே கேவல்ராம் தவே,             “வெற்றி பெறுவது, தோல்வியடைவது என்பதைப்பற்றி |      |   
				 | 
				 
			 
			 |