பக்கம் எண் :

294சத்திய சோதனை

Untitled Document
உமக்குக் கவலை வேண்டியதில்லை.      உம்மால் முடிந்த வரையில்
முயன்று பாரும்.        உமக்கு உதவி செய்வதற்கு நான் இருக்கவே
இருக்கிறேன்” என்றார்.

     எதிர்த்தரப்பு வக்கீல் காலஞ்சென்ற ஸ்ரீ சமர்த். ஓரளவுக்கு நான்
நன்றாகவே அவ்வழக்கு சம்பந்தமாகத் தயார் செய்து வைத்திருந்தேன்.
இந்தியச்     சட்டம் எனக்கு அதிகம் தெரியும் என்பதல்ல; ஆனால்,
கேவல்ராம் தவே அவ்வழக்குச்     சம்பந்தமாக எனக்கு முழுவதும்
சொல்லிக்கொடுத்திருந்தார்.         ‘ஸர் பிரோஸ்ஷா மேத்தாவுக்குச்
சாட்சியைப்பற்றிய சட்டம் முழுவதும் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும்;
அவருடைய          வெற்றியின் ரகசியமே அதுதான்’ என்று நான்
தென்னாப்பிரிக்காவுக்குப் போவதற்கு முன்னால் நண்பர்கள் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.        இதை மனத்திலேயே வைத்தும் இருந்தேன்.
எனவே, என் கப்பல்        பிரயாணத்தின்போது இந்திய சாட்சியச்
சட்டத்தை, அதைப் பற்றிய விளக்கங்களுடன் சேர்த்துக்  கவனமாகப்
படித்திருந்தேன். அதோடு,  தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலில்
எனக்கு ஏற்பட்ட அனுபவமும் சாதகமாக இருந்தது.

     இவ்வழக்கில் வெற்றி பெற்றேன்.      கொஞ்சம் நம்பிக்கையும்
உண்டாயிற்று. அப்பீல்களைக் குறித்து     எனக்குப் பயமே இல்லை.
அவற்றிலும் வெற்றி பெற்றேன். பம்பாயில்     தொழில் நடத்தினாலும்
நான்        தோல்வியடைய மாட்டேன் என்ற   ஒரு நம்பிக்கையை
இவையெல்லாம் எனக்கு உண்டாக்கின.

     பம்பாய்க்குப் போய்விடுவது என்று     நான் தீர்மானித்ததைக்
குறித்த சந்தர்ப்பங்களைப் பற்றிச் சொல்லும் முன்பு, பிறர் கஷ்டத்தை
உணராத ஆங்கில            அதிகாரிகளின் போக்கைக் குறித்தும்,
அவர்களுடைய          அறியாமையைப்பற்றியும் எனக்கு ஏற்பட்ட
அனுபவத்தைக் கூற விரும்புகிறேன்.    நீதி உதவியாளரின் கோர்ட்டு
ஓர் இடத்திலிருந்து        மற்றோர் இடத்திற்குப் போய்க்கொண்டே
இருக்கும். அந்த நீதிபதி சதா    சுற்றுப் பிரயாணம் செய்துகொண்டே
இருப்பார். வக்கீல்களும்   கட்சிக் காரர்களும் அவர் முகாம் போடும்
இடத்திற்கெல்லாம்         போய்க் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
தலைமை ஸ்தானத்தை விட்டு வெளியூர் போக வேண்டும்   என்றால்
வக்கீல்கள்              அதிகக் கட்டணம் கேட்பார்கள். இதனால்,
கட்சிக்காரர்களுக்குச்        சகஜமாகவே செலவு இரட்டிப்பு ஆகும்.
இவர்களுக்கு ஏற்படும்       அசௌகரியங்களைப்பற்றி நீதிபதிக்குக்
கவலையே இல்லை. நான்      மேலே சொன்ன அப்பீல் விசாரணை
வேராவலில் போடப் பட்டிருந்தது.       அவ்வூரிலோ பிளேக் நோய்
கடுமையாகப் பரவியிருந்தது.    5,500 பேரையே கொண்ட அவ்வூரில்
தினமும் 50 பேருக்கு அந்நோய்     கண்டுகொண்டிருந்தது என்பதாக
எனக்கு