பக்கம் எண் :

பம்பாயில் குடியேறினேன் 295

Untitled Document
ஞாபகம். உண்மையில்,     அந்த ஊரில் யாருமே இல்லை எனலாம்.
அவ்வூரிலிருந்து         கொஞ்ச தூரத்திலிருந்த ஆளில்லாத தரும
சத்திரத்தில் நான் தங்கினேன்.     ஆனால், கட்சிக்காரர்கள் எங்கே
தங்குவது? அவர்கள்       ஏழைகளாக இருந்துவிட்டால், கடவுளின்
கருணையில் நம்பிக்கை வைத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு
கதி இல்லை.

     இதே கோர்ட்டில் என் நண்பர்      ஒருவருக்கும் வழக்குகள்
இருந்தன. வேராவலில் பிளேக் நோய் பரவி  இருப்பதால் கோர்ட்டை
வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரி    மனுச் செய்து கொள்ளும்படி
அவர் எனக்குத் தந்தி கொடுத்திருந்தார்.       இந்த மனுவை நான்
கொடுத்ததன் பேரில் துரை,    “உங்களுக்குப் பயமாக இருக்கிறதா?”
என்று கேட்டார்.

     “எனக்குப் பயமாயிருக்கிறதா, இல்லையா என்பது விஷயமல்ல.
நான் எப்படியாவது       வெளியில் இருந்துவிட முடியும். ஆனால்,
கட்சிக்காரர்களின் நிலைமை என்ன?”    என்று பதில் சொன்னேன்.

     இதற்குத் துரை கூறியதாவது:          “பிளேக் இந்தியாவில்
நிரந்தரமானதாகிவிட்டது. அப்படியிருக்கப்       பயப்படுவானேன்?
வேராவலின் சீதோஷ்ண நிலை மிகவும் நன்றாக  இருக்கிறது. (துரை
டவுனுக்கு வெகு தொலைவில் கடற்கரையில்  அமைக்கப் பட்டிருந்த
அரண்மனைபோன்ற    ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தார்.) இவ்வாறு
திறந்த      வெளியில் வசிப்பதற்கு மக்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள
வேண்டும்.

     இப்படிப்பட்ட வேதாந்தத்திற்கு         எதிராக விவாதித்துப்
பயனில்லை. கடைசியாக,      துரை தமது சிரஸ்தேதாரிடம், “காந்தி
கூறுவதைக்           கவனித்துக்கொள்ளும்.    வக்கீல்களுக்கோ,
கட்சிக் காரர்களுக்கோ அதிக   அசௌகரியமாக இருக்கிறதென்றால்
எனக்கு அறிவியும்” என்றார்.

     சரியானது என்று தாம் நினைத்ததைத்   துரை யோக்கியமாகச்
செய்தார். ஆனால், ஏழை இந்தியரின்       கஷ்டங்களைக் குறித்து
அவருக்கு எப்படித் தெரியமுடியும்?          மக்களின் தேவைகள்,
குணாதிசயங்கள்,         பைத்தியக்காரத்தனங்கள்,    பழக்கங்கள்
ஆகியவைகளை    அவர் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?  தங்க
நாணயங்களைக் கொண்டே       பொருள்களை      மதிப்பிட்டுக்
கொண்டிருந்த ஒருவர் திடீரென்று       சின்னச் செப்புக்காசுகளைக்
கொண்டு எப்படிக் கணக்கிடுவார்?         யானைக்கு எறும்பினிடம்
நல்லெண்ணமே இருக்கலாம். ஆனால்,      எறும்பின் தேவையையும்
சௌகரியத்தையும் கொண்டு சிந்திக்கும் சக்தி   எவ்வாறு யானைக்கு
இல்லையோ அதேபோல    இந்தியருக்குச் சௌகரியமான வகையில்
சிந்திக்கவோ, சட்டம் செய்யவே ஆங்கிலேயருக்குச்