பக்கம் எண் :

296சத்திய சோதனை

Untitled Document
சக்தியில்லை.        இனித் திரும்பவும் கதைக்கு வருவோம். வக்கீல்
தொழிலில் நான் வெற்றிபெற்ற போதிலும்,    இன்னும் கொஞ்ச காலம்
ராஜ் கோட்டில்       இருப்பது என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு நாள் கேவல்ராம் தவே என்னிடம் வந்தார். “காந்தி,
நீங்கள் இங்கே           அதிக வேலையில்லாதிருப்பதை  நாங்கள்
சகித்துக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் பம்பாய்க்குக் குடிபோய்விட
வேண்டும்” என்றார்.

     “ஆனால் அங்கே எனக்கு யார் வேலை தேடிக்கொடுப்பார்கள்?
என் செலவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை     நீங்கள் செய்வீர்களா?”
என்று கேட்டேன்.

     இதற்கு      அவர் கூறியதாவது:     “சரி, நான் செய்கிறேன்.
பம்பாயிலிருந்து பெரிய பாரிஸ்டர் வருகிறார் என்று  சில சமயங்களில்
உம்மை இங்கே கொண்டு     வருவோம். மனுத் தயாரிப்பது போன்ற
வேலையை அங்கேயே          அனுப்புகிறோம். ஒரு பாரிஸ்டரைப்
பெரியவராக்குவதோ,          ஒன்றுமில்லாதபடி செய்து விடுவதோ
வக்கீல்களாகிய எங்கள் கையில் இருக்கிறது.       உமது திறமையை
ஜாம்நகரிலும் வேராவரிலும்    நிரூபித்துக் காட்டிவிட்டீர். ஆகையால்,
உம்மைப்பற்றி எனக்குக்        கொஞ்சமும் கவலையே இல்லை. நீர்
பொதுஜன சேவைக்கென்றே பிறந்திருப்பவர்.       நீர் கத்தியவாரில்
புதைந்துகிடந்துவிட         நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எனவே,
எப்பொழுது பம்பாய் போகிறீர்? சொல்லும்.”

     “நேட்டாலிலிருந்து பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அது வந்ததும் நான் போகிறேன்” என்றேன்.

     இரண்டு வாரங்களில் பணம் வந்துவிட்டது.     நானும் பம்பாய்
சென்றேன். பேய்னே, கில்பர்ட்,     சயானி ஆபீஸ் கட்டடத்தில் என்
அலுவலகத்தை அமைத்துக்கொண்டேன். அங்கேயே நான் ஸ்திரமாகக்
குடியேறிவிட்டதாகவே தோன்றியது.

22 கொள்கைக்கு நேர்ந்த சோதனை

     கோட்டையில்     அலுவலகத்திற்கு அறைகளையும், கீர்காமில்
வீட்டையும்   அமர்த்திக்கொண்டேன். ஆயினும் அமைதியாக நிலை
பெற்றிருக்க ஆண்டவன் என்னை    விடவில்லை. புதிய வீட்டுக்குக்
குடிபோனவுடனேயே என்னுடைய இரண்டாவது மகன் மணிலாலுக்குக்
கடுமையான     அஸ்தி சுரம் (டைபாய்டு) கண்டுவிட்டது. அத்துடன்
கபவாத சுரமும் (நிமோனியா) கலந்துகொண்டது.     இரவில் ஜன்னி
வேகத்தினால் பிதற்றல் போன்ற       அறிகுறிகளும் இருந்தன. சில
ஆண்டுகளுக்கு முன்னால்        இவன் வைசூரியால் கடுமையாகப்
பீடிக்கப் பட்டவன்.

     டாக்டரை அழைத்து வந்தேன். மருந்தினால்    அதிகப் பயன்