பக்கம் எண் :

304சத்திய சோதனை

Untitled Document
நான்காவது பாகம்

1 அன்பின் உழைப்பு வீணா?

     தென்னாப்பிரிக்காவிடமிருந்து        மூன்றரைக் கோடி பவுன்
நன்கொடையைப் பெறுவதற்கும்,        அங்கிருக்கும் ஆங்கிலேயர்,
போயர்கள்          இவர்களின்       மனத்தைக் கவருவதற்குமே
ஸ்ரீ சேம்பர் லேன் வந்திருந்தார். ஆகவே,         இந்தியரின் தூது
கோஷ்டிக்கு அவர் திருப்திகரமான      பதில் கூறவில்லை. "சுயாட்சி
பெற்றுள்ள குடியேற்ற    நாடுகளின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு
அதிகாரம் எதுவும் இல்லை என்பது  உங்களுக்குத் தெரியும். உங்கள்
குறைகள் நியாயமானவை என்றே தோன்றுகிறது.          என்னால்
முடிந்ததைச் செய்கிறேன். ஆனால்,    ஐரோப்பியரின் மத்தியிலிருந்து
வாழ நீங்கள் விரும்பினால், அவர்கள் உங்களிடம்          பிரியங்
கொள்ளும்படி செய்ய நீங்கள் முயலவேண்டும்"        என்று அவர்
கூறினார்.

     இந்தப் பதில், தூது சென்ற         இந்தியரின் உற்சாகத்தைக்
குலைத்துவிட்டது.              நானும் ஏமாற்றமடைந்தேன். எங்கள்
எல்லோருக்குமே இது கண்களைத்  திறந்துவிடுவதாக இருந்தது. இனித்
தீவிரமாக வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதே என்று கண்டேன்.
என் சகாக்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறினேன்.

     உண்மையில் ஸ்ரீ சேம்பர்லேனின் பதிலில்   தவறானது ஒன்றும்
இல்லை. விஷயத்தைக் குழப்பாமல்    உள்ளதை உள்ளபடியே அவர்
சொன்னது நல்லதேயாகும். 'வல்லவன் வகுத்ததே வாய்க்கால்' அல்லது
'வாளெடுத்தவன் வகுத்ததே சட்டம்' என்பதை        அவர் நயமான
முறையில் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். ஆனால்,  எங்களிடமோ
வாளே இல்லை. வாளினால் வெட்டப்படுவதற்கு வேண்டிய துணிச்சலும்
உடல் வலுவுங்கூட எங்களுக்கு இல்லை.

     இந்த உபகண்டத்தில்       ஸ்ரீ சேம்பர்லேன் கொஞ்ச காலமே
இருப்பதாக முடிவு செய்திருந்தார். ஸ்ரீ நகருக்கும் கன்னியாகுமாரிக்கும்
1,900 மைல் தூரம் என்றால்,     டர்பனுக்கும் கேப் டவுனுக்கும் 1,100
மைல் தூரத்திற்குக் குறைவில்லை.  ஸ்ரீ சேம்பர்லேன் இந்தத் தொலை
தூரத்தைச் சண்டமாருத வேகத்தில் சுற்றவேண்டியிருந்தது.

     நேட்டாலிலிருந்து    அவசரமாக டிரான்ஸ்வாலுக்குச் சென்றார்.
அங்கிருக்கும் இந்தியருக்காகவும் நான்       ஒரு விண்ணப்பத்தைத்
தயாரித்து அவரிடம் சமர்ப்பிக்க    வேண்டியிருந்தது. ஆனால், நான்
பிரிட்டோரியாவுக்குள் போய்ச் சேருவது எப்படி?    உரிய காலத்தில்
என்னைத் தங்களிடம் தருவித்துக்       கொள்ளுவதற்கு வேண்டிய
சட்ட வசதிகளைப்              பெறும் நிலையில் அங்கிருந்த நம்