பக்கம் எண் :

அன்பின் உழைப்பு வீணா 305

Untitled Document
மக்கள் இல்லை. போயர் யுத்தம்    டிரான்ஸ்வாலை வனாந்திரமாக்கி
விட்டது. உணவுப் பொருள்களோ,         துணிமணிகளோ அங்கே
கிடைப்பதில்லை.      கடைகளெல்லாம் காலியாகவோ, மூடப்பட்டோ
கிடந்தன. அவை திறக்கப்பட்டு,      சாமான்கள் விற்க ஆரம்பிக்கும்
என்று எதிர்பார்க்கப்பட்ட தெனினும், அதற்கு    நாளாகும். கடைகள்
திறக்கப்பட்டு உணவுத் தானியங்கள் விற்கப்படும் வரையில், முன்னால்
அங்கிருந்து        ஓடிப் போய்விட்டவர்களைக் கூடத் திரும்பி வர
அனுமதிக்க           முடியாது. ஆகையால்,   டிரான்ஸ்வால் வாசி
ஒவ்வொருவரும் உள்ளே         நுழைய   அனுமதிச் சீட்டுப் பெற
வேண்டியிருந்தது. இது  ஐரோப்பியருக்கு    எந்தவிதமான கஷ்டமும்
இல்லாமல் கிடைத்து விடும். ஆனால்,      இந்தியருக்கோ இது மிகக்
கஷ்டமானதாயிற்று.

     யுத்தத்தின்போது இந்தியாவிலிருந்தும்   இலங்கையில் இருந்தும்
அநேக அதிகாரிகளும்      சிப்பாய்களும்   தென்னாப்பிரிக்காவுக்கு
வந்திருந்தனர்.              அவர்களில்  அங்கேயே குடியேறிவிட
விரும்புகிறவர்களுக்கு  ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டியது,
பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடமை என்று    கருதப்பட்டது. எப்படியும்
அவர்கள் புதிதாக அதிகாரிகளை        நியமிக்க வேண்டியிருந்தது.
அனுபவம் வாய்ந்த அவர்கள்          இருந்தது சௌகரியமாயிற்று.
அவர்களில் சிலரின் சுறுசுறுப்பான   புத்திக்கூர்மையினால் ஒரு புதிய
இலாகாவையே       சிருஷ்டித்து விட்டார்கள். இது அவர்களுடைய
சாமார்த்தியத்தைக் காட்டியது. நீக்ரோக்களுக்கென்று ஒரு தனி இலாகா
இருந்தது. அப்படியானால்,    ஆசியாக்காரர்களுக்கென்றும் ஒரு தனி
இலாகா ஏன் இருக்கக் கூடாது? இந்த வாதம்      நியாயமானதாகவே
தோன்றியது. நான் டிரான்ஸ்வாலை     அடைந்ததற்கு முன்னாலேயே
இந்த இலாகா ஆரம்பமாகி         தன்னுடைய அதிகாரத்தை நாலா
பக்கங்களிலும் பரப்பி வந்தது.   அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கும்
அதிகாரிகள், வெளியேறியிருந்து       இப்பொழுது திரும்புகிறவர்கள்
எல்லோருக்குமே அனுமதிச்    சீட்டுக்களைக் கொடுக்கலாம். ஆனால்,
திரும்பி வரும்   ஆசியாக்காரர்களுக்குப் புதிய இலாகாவின் குறுக்கீடு
இல்லாமல் அவர்கள் எப்படிக்         கொடுத்துவிட முடியும்? புதிய
இலாகாவின்             சிபாரிசின் பேரிலேயே அனுமதிச்  சீட்டுக்
கொடுப்பதென்றால் அனுமதிச் சீட்டுக் கொடுக்கும் அதிகாரிகளின் சில
பொறுப்புக்களும், பாரமும் குறைந்து விடும்.     இவ்வாறே அவர்கள்
வாதித்தார்கள். ஆனால்           உண்மை என்னவென்றால், புதிய
இலாகாவுக்கு ஏதாவது     வேலை வேண்டும் என்பதுதான். அதோடு
அந்த ஆட்களுக்குப் பணமும் வேண்டும்.     அவர்களுக்கு வேலை
இல்லையென்றால்,          அந்த இலாகா அவசியம் இல்லை என்று
ஆகிவிடும்; அதை எடுத்தும் விடுவார்கள்.        ஆகையால், இந்த
வேலையை அவர்களே