பக்கம் எண் :

306சத்திய சோதனை

Untitled Document
தங்களுக்குத் தேடிக்கொண்டார்கள்.

     இந்தியர், அனுமதிச் சீட்டுக்கு இந்த இலாகாவிடம் மனுச் செய்து
கொள்ள வேண்டும்.        பல நாட்கள் கழித்தே பதில் கிடைக்கும்.
டிரான்ஸ்வாலுக்குத்             திரும்ப விரும்பியவர்களின் தொகை
ஏராளமானதாக இருந்துவிடவே,    இதற்குத் தரகர் கட்டணம் மிகவும்
வளர்ந்துவிட்டது.     அதிகாரிகளுடன் சேர்ந்து இத் தரகர்கள் ஏழை
இந்தியர்களிடமிருந்து        ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்தனர்.
சிபாரிசு இல்லாமல்         அனுமதிச் சீட்டே கிடைக்காது என்பதை
அறிந்தேன். சிபாரிசு வைத்தும்        சிலர் விஷயத்தில் நூறு பவுன்
வரையில் பணமும் கொடுக்க வேண்டியிருந்ததாம்.    இந்த நிலையில்
நான்           டிரான்ஸ்வாலுக்குப் போவதற்கு வழி இருப்பதாகவே
தோன்றவில்லை. எனது         பழைய நண்பரான டர்பன் போலீஸ்
சூப்பரிண்டெண்டென்டிடம் போனேன். “தயவு செய்து அனுமதிச் சீட்டு
அதிகாரிக்கு என்னை அறிமுகம்    செய்துவைத்து எனக்கு அனுமதிச்
சீட்டுக் கிடைக்க உதவுங்கள். நான் டிரான்ஸ்வாலில் வசித்திருக்கிறேன்
என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று அவரிடம்  கூறினேன். உடனே,
அவர் தொப்பியை எடுத்து வைத்துக் கொண்டு  புறப்பட்டு என்னுடன்
வந்து எனக்கு அனுமதிச் சீட்டை வாங்கிக் கொடுத்தார். நான் புறப்பட
வேண்டிய ரெயில் கிளம்புவதற்கு  அரைமணி நேரமே இருந்தது. என்
சாமான்களையெல்லாம்          முன்பே தயாராக வைத்திருந்தேன்.
சூப்பரிண்டெண்டென்ட் அலெக்ஸாண்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டுப்
பிரிட்டோரியாவுக்குப் புறப்பட்டேன்.

     என் முன்னாலிருக்கும் கஷ்டங்கள்      எவ்வளவு என்பதைக்
குறித்து ஒருவாறு நான்           இப்பொழுது தெரிந்துகொண்டேன்.
பிரிட்டோரியா போய்ச் சேர்ந்ததும்         விண்ணப்பத்தைத் தயார்
செய்தேன். சேம்பர்லேனைச்       சந்திக்கப் போகும் பிரதிநிதிகளின்
பெயரை முன்கூட்டியே       சமர்ப்பிக்க வேண்டும் என்று டர்பனில்
கேட்கப்பட்டதாக எனக்கு   ஞாபகம் இல்லை. ஆனால், இங்கோ புது
இலாகா இருந்தது; அது      முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்று
கேட்டது. என்னைப் பிரதிநிதிகளில்      ஒருவனாக இருக்கவிடாமல்
செய்ய அதிகாரிகள்       விரும்பினார்கள் என்பதை பிரிட்டோரியா
இந்தியர் அப்பொழுதே அறிந்திருந்தனர்.

     வேடிக்கையானதேயென்றாலும் வேதனையான இச்சம்பவத்திற்கு
மற்றோர் அத்தியாயமும் அவசியம்.

2 ஆசியாவிலிருந்து வந்த எதேச்சாதிகாரிகள்

     நான் டிரான்ஸ்வாலுக்குள்  பிரவேசித்துவிட்டது எப்படி என்பது
புதிய இலாகாவின்       தலைமை அதிகாரிகளுக்கு விளங்கவில்லை.
தங்களிடம் வரும் இந்தியரிடம் இதைப்பற்றி