பக்கம் எண் :

அவமதிப்புக்கு உட்பட்டேன்311

Untitled Document
செய்த பணிக்கு நாம்         வெகுமதியை எதிர் பார்க்கக் கூடாது.
என்றாலும்,எந்த       நல்ல காரியமும் முடிவில் பலனளித்தே தீரும்
என்பது என் திடமான நம்பிக்கை. நடந்துபோனதை மறந்துவிட்டு நம்
முன்னால் இப்பொழுது இருக்கும்        வேலை என்ன என்பதைக்
கவனிப்போம்” என்று        நான் கூறியதை மற்றவர்களும் ஒப்புக்
கொண்டார்கள்.

     நான் மேலும் கூறியதாவது: “உண்மையைச் சொன்னால், நீங்கள்
எந்த வேலைக்காக என்னை அழைத்திருந்தீர்களோ   அந்த வேலை
இப்பொழுது முடிந்துவிட்டது. நான் தாய் நாடு திரும்புவதற்கு என்னை
நீங்கள்          அனுமதிப்பது சாத்தியமே என்று இருந்தாலும் நான்
டிரான்ஸ்வாலை      விட்டுப் போகக் கூடாது என்று எண்ணுகிறேன்.
முன்போல          நேட்டாலில் இருந்துகொண்டு என் வேலையைச்
செய்துகொண்டிருப்பதற்குப் பதிலாக,      இங்கிருந்துகொண்டே நான்
அதைச் செய்து வரவேண்டும். ஓர் ஆண்டுக்குள்     இந்தியாவுக்குத்
திரும்புவது என்று நான் இனியும் எண்ணிக்  கொண்டிருப்பதற்கில்லை.
டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில்            வக்கீலாக நான் பதிவு
செய்துகொள்ளவேண்டியதே.                இப்புதிய இலாகாவைச்
சமாளித்துக்கொண்டுவிட       முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு
இருக்கிறது. இதை நாம் செய்யவில்லை என்றால்,  சமூகம் அடியோடு
கொள்ளையடிக்கப்பட்டு விடுவதோடு             இந்நாட்டிலிருந்து
விரட்டியடிக்கப்பட்டும் விடும்.          ஒவ்வொரு நாளும் புதுப்புது
அவமரியாதைகள் சமூகத்தின்மீது வந்து குவிந்து கொண்டும் இருக்கும்.
ஸ்ரீ சேம்பர்லேன் என்னைப் பார்க்க மறுத்ததையும்,   அந்த அதிகாரி
என்னை அவமதித்ததையும்,         இந்தியச் சமூகம் முழுமைக்கும்
இருந்து வரும் அவமதிப்போடு      ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே
இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.    கேவலம் நாயின் வாழ்வை
நாம் நடத்திக்    கொண்டிருக்கவேண்டும் என்று நாம் எதிர் பார்க்கப்
படுகிறோம். இதைச் சகித்துக்கொண்டிருக்கவே முடியாது.”

     எனவே, நான்           வேலையைச் செய்துகொண்டு போக
ஆரம்பித்தேன். பிரிட்டோரியாவிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் இருக்கும்
இந்தியருடன்              விஷயங்களை விவாதித்தேன். முடிவாக
ஜோகன்னஸ்பர்க்கில் எனது      அலுவலகத்தை அமைப்பது என்று
தீர்மானித்தேன்.

     டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் என்னை   வக்கீலாகப் பதிவு
செய்துகொள்ளுவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால்,
வக்கீல்கள் சங்கம் என் மனுவை எதிர்க்கவில்லை.       கோர்ட்டும்
அங்கீகரித்துவிட்டது.         தகுதியான இடத்தில் அலுவலகத்திற்கு
அறைகளை           அமர்த்திக்கொள்வது என்பது இந்தியருக்குக்
கஷ்டமானதாகவே இருந்தது. ஸ்ரீ ரிச் என்பவர்