பக்கம் எண் :

312சத்திய சோதனை

Untitled Document
அப்பொழுது அங்கே வர்த்தகராக இருந்தார்.     அவருடன் எனக்கு
நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.  அவருக்குத் தெரிந்த வீட்டுத் தரகர்
ஒருவருடைய       முயற்சியின் பேரில் நகரில் வக்கீல்கள் இருக்கும்
பகுதியில் என் அலுவலகத்திற்குத்    தகுதியான அறைகள் எனக்குக்
கிடைத்தன. என்             தொழில் சம்பந்தமான வேலையையும்
தொடங்கினேன்.

4 தியாக உணர்ச்சி மிகுந்தது

     டிரான்ஸ்வாலில் குடியேறிய      இந்தியரின் உரிமைக்காகவும்,
ஆசியாக்காரர் இலாகாவின் சம்பந்தமாகவும் நடந்த போராட்டத்தைக்
குறித்து நான் கூறும் முன்பு, என்        வாழ்க்கையின் வேறு சில
அம்சங்களைப்பற்றியும் நான் கூறவேண்டும்.

     இதுவரையில் எனக்குக் கலப்பானதோர்      ஆர்வம் இருந்து
வந்தது. தன்னலத் தியாகம் செய்ய வேண்டும்   என்ற உணர்ச்சியை,
வருங்காலத்திற்கு ஏதாவது ஒரு பொருள்   சேர்த்துவைக்க வேண்டும்
என்ற ஆர்வம் மிதப்படுத்திக்கொண்டிருந்தது.

     பம்பாயில் நான் என் அலுவலகத்தை    அமைத்த சமயம், ஓர்
அமெரிக்க இன்ஷூயூரன்ஸ் ஏஜெண்டு அங்கே வந்தார். அவர் நல்ல
முகவெட்டும் இனிக்கப் பேசும்  திறமையும் உள்ளவர். நாங்கள் ஏதோ
வெகு காலம் பழகிய நண்பரைப் போல       அவர் என்னிடம் என்
வருங்கால நலனைக்         குறித்து விவாதித்தார். “அமெரிக்காவில்
உங்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்     எல்லோரும் தங்கள் ஆயுளை
இன்ஷூர் செய்திருக்கிறார்கள். எதிர்காலத்தை  முன்னிட்டு நீங்களும்
இன்ஷூர் செய்துகொள்ள     வேண்டாமா? வாழ்வு நிச்சயமில்லாதது.
அமெரிக்காவிலுள்ள நாங்கள்,      இன்ஷூர் செய்து கொண்டு விட
வேண்டியதை ஒரு மதக் கடமையாகவே     கருதுகிறோம். நீங்களும்
ஒரு சிறு தொகைக்கு இன்ஷூர்         செய்து கொள்ளுமாறு நான்
உங்களைத் தூண்டக்கூடாதா?“ என்றார், அவர்.

     இந்தச்       சமயம் வரையில்,      தென்னாப்பிரிக்காவிலும்
இந்தியாவிலும்,    நான் சந்தித்த      இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள்
கூறியதற்கெல்லாம் செவிகொடுக்காமல்    இருந்திருக்கிறேன். ஆயுள்
இன்ஷூர் செய்வதென்பது பயத்தையும்,      கடவுளிடம் நம்பிக்கை
இன்மையையும் காட்டுவதாகும் என்று நான் எண்ணினேன். ஆனால்,
இப்பொழுதோ அமெரிக்க          ஏஜெண்டு காட்டிய ஆசைக்குப்
பலியாகிவிட்டேன். அவர் தமது வாதத்தைச் சொல்லிக் கொண்டிருந்த
போது என் மனக்கண்ணின் முன்பு என்  மனைவியும் குழந்தைகளும்
நின்றனர். ‘உன் மனைவியின் நகைகள்   எல்லாவற்றையுமே நீ விற்று
விட்டாய். என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.     ‘உனக்கு
ஏதாவது நேர்ந்துவிட்டால்,           அவளையும் குழந்தைகளையும்
பராமரிக்கும் பாரம், உன் ஏழைச்