பக்கம் எண் :

314சத்திய சோதனை

Untitled Document
தங்கியபோது  கிறிஸ்தவர்களின் தொடர்பே, சமய உணர்ச்சி என்னுள்
குன்றாமல்  இருக்கும்படி செய்து வந்தது. இப்பொழுதோ, பிரம்மஞான
சங்கத்தினரின் தொடர்பு, அதற்கு அதிக பலத்தை அளித்தது. ஸ்ரீ ரிச்
பிரம்மஞான   சங்கத்தைச் சேர்ந்தவர். ஜோகன்ன ஸ்பர்க்கிலிருக்கும்
அச்சங்கத்துடன் எனக்குத் தொடர்பு    ஏற்படும்படி அவர் செய்தார்.
அதற்கும் எனக்கும்   அபிப்பிராயபேதம் இருந்ததால், அச்சங்கத்தில்
நான் அங்கத்தினன் ஆகவில்லை.            ஆனால், அநேகமாக
அச்சங்கத்தினர் ஒவ்வொருவருடனும் நான்   நெருங்கிப் பழகினேன்.
ஒவ்வொரு நாளும் சமய சம்பந்தமாக  அவர்களுடன் விவாதிப்பேன்.
பிரம்மஞான நூல்களிலிருந்து    சில பகுதிகளை அங்கே படிப்போம்.
சில சமயங்களில் அவர்கள் கூட்டங்களில் பேசும் வாய்ப்பும் எனக்கு
இருந்தது.          பிரம்ம ஞான சங்கத்தின் முக்கியமான விஷயம்,
சகோதரத்துவ எண்ணத்தை      வளர்த்துப் பரப்புவதாகும். இதைக்
குறித்து எவ்வளவோ   விவாதித்து இருக்கிறோம். அங்கத்தினர்களின்
நடத்தை அவர்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதாக இல்லாத
சமயங்களில் அவர்களை நான் குறை கூறுவேன்.   இவ்விதம் குறை
கூறிவந்ததால், என்னளவில்      நன்மை ஏற்படாமல் போகவில்லை.
என்னையே நான்    சோதனை செய்து பார்த்துக்கொள்ளுமாறு அது
செய்தது.

5 ஆன்ம சோதனையின் பலன்

     1893-இல் கிறிஸ்தவ நண்பர்களுடன்       எனக்குத் தொடர்பு
ஏற்பட்டபோது நான் ஒன்றும் தெரியாதவனாகவே இருந்தேன். ஏசுவின்
உபதேச மேன்மையை              நான் உணர்ந்து அதை ஏற்றுக்
கொண்டுவிடும்படி செய்வதற்கு            அவர்கள் பெரு முயற்சி
எடுத்துக்கொண்டார்கள். நானோ,       திறந்த மனத்துடன் அவர்கள்
கூறியதையெல்லாம் அடக்கத்தோடும்      மரியாதையோடும் கேட்டுக்
கொண்டேன். அச்சமயம்            என் சக்திக்கு எட்டியவரையில்
இயற்கையாகவே ஹிந்து சமயத்தைக் குறித்து நான் படித்து வந்ததோடு
மற்றச்     சமயங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்று வந்தேன்.

     1903-ஆம் ஆண்டிலோ, நிலைமை        ஓரளவுக்கு மாறுதல்
அடைந்துவிட்டது.          பிரம்மஞான சங்க நண்பர்கள், என்னை
அச்சங்கத்திற்குள் இழுத்துவிட நிச்சயமாக முயன்றே வந்தனர். ஹிந்து
என்ற முறையில் என்னிடமிருந்து     ஏதாவது அறிந்து கொள்ளலாம்
என்ற        நோக்கத்தின் பேரிலேயே    அவ்வாறு முயன்றார்கள்.
பிரம்மஞான சங்க நூல்களில் ஹிந்து தருமத்தைப் பற்றிய விஷயங்கள்
நிறைந்திருக்கின்றன. ஆகையால்,     நான் அவர்களுக்கு உதவியாக
இருக்கக்கூடும் என்று இந்த நண்பர்கள்    கருதினார்கள். சமஸ்கிருத
மொழி எனக்கு அவ்வளவாக நன்றாகத்